நாமகள் இலம்பகம் |
197 |
|
திங்கள் : திலகத்திற்கு உவமை. உகிர் - நகம். சொலித்தல் -
உரித்தல் ; மாசில் காம்பு சொலித்தன்ன எனவரும் சிறுபாணாற்றுப்படையினும் அஃது அப்
பொருட்டாதல் உணர்க.
|
( 321 ) |
351 |
பஞ்சிய யனைய வேய்மென்றோட் |
|
பகுவாய் மகரங் கான்றிட்ட |
|
துஞ்சாக் கதிர்கொ டுணைமுத்தந் |
|
தொழுதே னும்மை யெனத்துறந்து |
|
வஞ்சி வருந்தும் நுசுப்பினாள் |
|
வளைகை யுடைத்து மணிக்காந்த |
|
ளஞ்சச் சிவந்த மெல்விரல்சூ |
|
ழரும்பொ னாழி யகற்றினாள். |
|
(இ - ள்.)
அஞ்சி வருந்தும் நுசுப்பினாள் - (மேலுள்ள பொறையைச் சுமக்க) அச்சமுற்று வருந்தும்
இடையினாள்; பஞ்சிஅனைய வேய் மென்தோள் - பஞ்சிபோன்ற மென்மை பொருந்திய வேயனைய தோள்களில்
உள்ள ; பகுவாய் மகரம் கான்றிட்ட துஞ்சாக் கதிர்கொள் துணைமுத்தம் - திறந்த
வாயினையுடைய மகரமின் உமிழ்ந்த மாறாத கதிர்களையுடைய பலவடம் சேர்ந்த முத்துக்களை;
உம்மைத் தொழுதேன் எனத் துறந்து - உங்களை வணங்கினேன் என்று கூறி நீக்கி; வளை கை
உடைத்து - வளையல்களைக் கையின்னின்றும் உடைத்து ; மணிக்காந்தள் அஞ்சச் சிவந்த
மெல்விரல்சூழ் அரும்பொன் ஆழி அகற்றினாள் - அழகிய காந்தளும் அஞ்சுமாறு சிவந்த
மெல்லிய விரல்களிற் சூழ்ந்திருந்த அரிய பொன் மோதிரத்தை நீக்கினாள்.
|
|
(வி - ம்.)
மகரமீன் முத்தை உமிழ்வது போற் செய்திருப்பது தோளணி. அரசன் நீங்காமல் தழுவுதற்குக்
காரணமாய்த் தன்னைக்
|
|
திலகத்தை விரலினாலே போக்கி ; பைம்பொன் மகரகுண்டலமும் - பசிய
பொன்னாலான மகர குண்டலத்தையும்; கழுத்தின் அணிகலமும் - கழுத்தணிகளையும்; வெங்கண்
வேந்தற்கு அமிர்தாகி வேற்கண் பாவை பகையாய் அங்கண் முலையின் அணிமுத்தும் - விருப்பம்
ஊட்டும் கண்களையுடைய வேந்தனுக்கு அமிர்தமாகி, வேற்கண்ணாளாகிய பாவை போல்வாளுக்குப்
பகையாக அமைந்த அழகிய கருங்கண்களையுடைய முலைகளின்மேல் அணிந்த முத்துக்களையும்;
அரும்பொன் பூணும் -அரிய பொற்கலன்களையும்; பாவை அகற்றினாள் - விசயை நீக்கனிள்.
|
|
(வி - ம்.)
இன்பத்தால் அவனைக் கெடுத்தலின் தனக்குப் பகையாயின முலைகள். உகிரிற் சிதைப்பது போல்
என்றும் பாடம்.
|
|