பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 198 

கெடுத்தலின். 'தொழுதேன்' என்று இகழ்ந்தாள். வளை கழற்றலரி தாகையால் உடைத்தாள். மணி - அழகு.

 

   முத்தம் : அண்மைவிளியுமாம்.

( 322 )
352 பூப்பெய் செம்பொற் கோடிகமும்
  பொன்னா ரால வட்டமு
மாக்கு மணிசெய் தோ்த்தட்டு
  மரவின் பையு மடுமல்குல்
வவீக்கி மின்னுங் கலையெல்லாம்
  வேந்தன் போகி யரம்பையரை
நோக்கி நும்மை நோக்கானீர்
  நோவா தொழிமி னெனத்துறந்தாள்.

   (இ - ள்.) வேந்தன்போகி அரம்பையரை நோக்கி நும்மை நோக்கான் - அரசன் வானுலகு சென்றதால் இனி வான்மகளிரை நோக்குதலன்றி நும்மாலாய பயனைக் கொள்ளான்; நீர் நோவாது ஒழிமின்என - நீர் இனி வருந்தாமல் நீங்குமின் என்று கூறி ; பூபெய் செம்பொன் கோடிகமும் - பூவை வைக்கும் பொன்னாலான பூந்தட்டையும்; பொன்ஆர் ஆலவட்டமும் - பொன்னாலான ஆலவட்டத்தையும்; ஆக்கும் மணிசெய் தேர்த்தட்டும் - மணியாலாக்கி அமைத்த தேர்த்தட்டையும்; அரவின் பையும் - பாம்பின் படத்தையும்; அடும் அல்குல் வீக்கி மின்னும் கலையெல்லாம் துறந்தாள் - வென்ற அல்குலிலே அணிந்து மின்னும் மேகலைகளெல்லாவற்றையும் நீக்கினாள்.

 

   (வி - ம்.) அரம்பையரை மெய்யுறு புணர்ச்சியின்றி நோக்கால் நுகர்தல் இயல்பாதலால், 'நோக்கி' என்றார். எனினும் 'நும்மை நோக்கான்' என்பதற்கு, 'நும்மாலான பயனைக் கொள்ளான்' என்றே பொருள் கொள்க. இது கண்ணால் நோக்காமல் மனத்தால் நோக்கும், 'நோக்கல் நோக்கம்' (தொல் -வேற்றுமை மயங்கு- 10) எனப்படும்.

( 323 )
353 பிடிக்கை போலுந் திரள்குறங்கி
  னணியு நீக்கிப் பிணையன்னா
ளடிக்கிண் கிணியு மஞ்சிலம்பும்
  விரன்மோ திரத்தோ டகற்றியபின்
கொடிப்பூத் துதிர்ந்த தோற்றம்போற்
  கொள்ளத் தோன்றி யணங்கலற
வுடுத்தாள் கற்றோய் நுண்கலிங்க
  முரவோன் சிறுவ னுயர்கெனவே.