நாமகள் இலம்பகம் |
201 |
|
|
”எர்குலா முகத்தினாளை இறைமுக மெடுத்து நோக்கித் |
|
|
தார்குலா மலங்கன் மார்பன் தாயரை நினைந்து நைந்தான்” (கிட்கிந்தை - 51) |
|
என்று அழகுற அமைத்துக்கொண்டனர்.
|
( 326 ) |
356 |
பெண்மைநாண் வனப்புச் சாயல் |
|
பெருமட மாது பேசி |
|
னொண்மையி னொருங்கு கூடி |
|
யுருவுகொண் டனைய நங்கை |
|
நண்ணிய நுங்கட் கெல்லா |
|
மடைக்கல மென்று நாடுங் |
|
கண்ணிய குலனுந் தெய்வங் |
|
கரந்துரைத் தெழுந்த தன்றே. |
|
(இ - ள்.) பெண்மை நாண் வனப்பு சாயல் பெருமடம் மாது பேசின் - அமைதித் தன்மையும் நாணும் அழகும் மென்மைத் தன்மையும் பெருமைமிக்க மடனும் காதலும் ஆகியவற்றை ஆராயின்; ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை - அவை தாம் விளக்கமுற ஒன்று கூடி ஒரு வடிவு கொண்டாற் போலும் நங்கையாகிய இவள்; நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று - நற்பண்பெலாம் பொருந்திய நுங்கட்கு எவ்வகையானும் அடைக்கலமாயினள் என்று கூறி; நாடும் கண்ணிய குலனும் கரந்து உரைத்து - விசயையின் நாட்டையும் கருதற்குரிய குலத்தையும் மறைத்துக் கூறி; தெய்வம் எழுந்தது - கூனி வடிவான தெய்வம் போதற்கு ஒருப்பட்டது.
|
|
(வி - ம்.) பெண்மை -அமைதித் தன்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. மாது - காதல் : மாதர் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது.
|
( 327 ) |
வேறு
|
|
357 |
உறுதி சூழ்ந்தவ ணோடலி னாயிடை |
|
மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ் |
|
சிறுவன் தன்மையைச் சோ்ந்தறிந் திவ்வழிக் |
|
குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள். |
|
(இ - ள்.) உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் - விசயைக்கு வேண்டும் நலன்களை ஆராய்ந்தவாறு தன் இருப்பிடத்திற்குப் போகத் தெய்வம் ஒருப்பட்டதால்; மறுஇல் வெண்குடை மன்னவன் காதல் அம் சிறுவன் தன்மையை - குற்றமற்ற
|
|