பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 202 

வெண்குடை வேந்தனின் அன்புக்குரிய நம்பியின் நிலைமையை ; ஆயிடைச் சேர்ந்து அறிந்து - இராசமாபுரத்தைச் சார்ந்து அறிந்து; இவ் வழி குறுக வம் என - இங்கே குறுகிய காலத்திலே வம்மின் என்று; கூனியைப் போக்கினாள் - கூனி யுருவத் தெய்வத்தை விசயை வேண்டி விடுத்தாள்.

 

   (வி - ம்.) ஆயிடை : சுட்டு நீண்டதால் யகரந் தோன்றியது ; அவ்விடம் என்று பொருள். ஓடல் : எண்ணம் ஓடுதல் . சேடியை 'வம் 'மென உயர்த்துக் கூறினாள் தான் நிற்குந் தவநிலைக் கேற்ப. (தெய்வம் தன் தெய்வத் தன்மையால் விசயைக்கும் தன் மகனைக் காக்கக் கூனி செல்ல வேண்டு மென்ற எண்ணத்தை உண்டாக்கியது என்பர் நச்சினார்க்கினியர்.)

( 328 )
358 நெஞ்சி னொத்தினி யாளையென் னீர்மையால்
வஞ்சித் தேனென வஞ்சியங் கொம்பனாள்
பஞ்சி மெல்லடிப் பல்கல னார்ப்பச்சென்
றிஞ்சி மாநகர்த் தன்னிட மெய்தினாள்.

   (இ - ள்.) வஞ்சி அம் கொம்பனாள் - அழகிய வஞ்சிக் கொடி போன்ற அணங்கினாள்; இனியாளை நெஞ்சின் ஒத்து என் நீர்மையால் வஞ்சித்தேன் என - இனிய பண்புடைய விசயையை மனம் ஒத்து என் தெய்வத் தன்மையால் (சிறுவன் நிலையறிந்து வருவேன் என்று) வஞ்சித்தேன் என்று வருந்தியவாறு; பஞ்சி மெல் அடிப் பல்கலன் ஆர்ப்பச் சென்று - பஞ்சனைய மெல்லிய அடிகளாற் பல கலன்களும் ஒலிக்கச் சென்று; இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள் - மதிலையுடைய இராசமாபுரத்தின் புறத்தே உள்ள சுடுகாட்டை அடைந்தாள்.

 

   (வி - ம்.) தெய்வம் தன்னெஞ்சின் அங்ஙனமே வருகுவன் என்று ஒப்புக்கொண்டு அங்ஙனம் ஒப்புக்கொண்டமை நெஞ்சறிந்த வஞ்சகமாதற்கு வருந்திற்றென்க. இஃது அத்தெய்வத்தின் மாசற்ற உளத்தினை நன்கு காட்டுகின்றது. வஞ்சியங் கொம்பனாள் என்றது தெய்வத்தை. தன்னிடம் - சுடுகாடு.

( 329 )
359 தானுந் தன்னுணர் விற்றளர்ந் தாற்றவு
மானின் நோக்கி வரும்வழி நோக்கிநின்
றானி யம்பல வாசையிற் செல்லுமே
தேனி யம்புமொர் தேம்பொழிற் பள்ளியே.

   (இ - ள்.) மானின் நோக்கி - மானனைய நோக்கினையுடைய விசயை; தானும் தன் உணர்வின் ஆற்றவும் தளர்ந்து - தானும் அக் கூனியைத் தெய்வம் என்று அறியாத தன் பெண்மையுணர்வினாலே மிகவும் சோர்வுற்று ; வரும் வழி நோக்கி நின்று - வரும் நெறியைப் பார்த்தவாறு நின்று ; ஆசையின் பல ஆனியம் -