நாமகள் இலம்பகம் |
203 |
|
இன்னும் வருவாள் வருவாள் என்ற ஆசையினாலே பல நாட்கள் (இரவும் பகலுமாக) ; தேன் இயம்பும் ஓர் தேன் பொழில் பள்ளி செல்லும் - வண்டுகள் முரலும் தேன் பொதிந்த மலர்க்காவில் உள்ள ஒரு பள்ளியிலே தவ வாழ்க்கையை நடத்துவாளாயினள்.
|
|
(வி - ம்.) மானின் : இன் : சாரியை.
|
|
இச்செய்யுள் அவலச் சுவைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். தன்னுணர்வின் என்றது தனக்குரிய பெண்மையுணர்வினால் என்றவாறு, ஆற்றவும்-மிகவும். ஆனியம் - (ஆநியம்) நாள் ; பகலுமாம் ; ”பயங்கெழு வெள்ளிய ஆநிய நிற்ப” எனவரும் பதிற்றுப் பத்தானும் அஃது அப்பொருட்டாதலறிக.
|
( 330 ) |
வேறு
|
|
360 |
மட்டவிழ் கோதை வாளன வுண்கண் மயிலன்னாள் |
|
கட்டழ லெவ்வங் கைம்மிக நீக்கிக் களிகூர |
|
விட்டகல் வாற்றா வேட்கையி னோடும் பொழுதிப்பாற் |
|
பட்டதை யெல்லாம் பல்லவர் கேட்கப் பகர்குற்றேன். |
|
(இ - ள்.) மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள் - தேன்விரியும் மலர்மாலையும் வாளனைய மை தீட்டிய கண்களும் மயிலனைய மென்மையும் உடையாளாகிய சுநந்தையின் ; கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கிக் களிகூர - மகனை யிழந்த பெரு நெருப்பனைய துன்பத்தைச் சிறிதுமின்றிப் போக்கிக் களிப்பு மிகுதலால் ; விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும்பொழுது இப்பால் - சுநந்தையே யன்றி மறறோரும் நம்பியை விட்டு நீங்குதலை விரும்பாத காதலுடன் கழிந்த அவ்விராப் பொழுதுக்குப் பிறகு ; பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன் - நம்பிக்கு நேர்ந்ததை யெல்லாம் எல்லோரும் கேட்குமாறு கூறுவேனாகத் தொடங்கினேன்.
|
|
(வி - ம்.) அகல்வு - அகற்சி. வேட்கையின் : இன் : சாரியை. பகர்கு : தன்மை யொருமை வினைமுற்று.
|
|
['என்றது தம்மால் சரிதம் கூறுதல் அரிதாகலின், இனி வேட்கையால் கடுகக் கழியும் பொழுது என்றுமாம்' என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர்.]
|
|
ஈண்டு ”என்றது . . . . . . . பொழுதென்றுமாம்” என்றுள்ள நச்சினார்க்கினியர் விளக்கம் நன்கு தெளியத் தோன்றவில்லை. அது ”என்றது தம்மாற் சரிதம் கூறுதல் அரிதாகவும் வேட்கையினாலே (ஓடும் பொழுதிப்பால்) கடுகக் கழியாநின்ற அப்பொழுதிற்கு இப்பால் பட்டதை எல்லாம் பகர்குற்றேன் என்றார்” என்னும் கருத்துடையதாக இருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது.
|
( 331 ) |