நாமகள் இலம்பகம் |
204 |
|
361 |
கூற்றம் மஞ்சுங் கொன்னுனை யெஃகி னிளையானு |
|
மாற்றம் மஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் |
|
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச் |
|
சீற்றத் துப்பிற் சீவக னென்றே பெயரிட்டார். |
|
(இ - ள்.) கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் - கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேலேந்திய கந்துக் கடனும்; மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் - கணவன் மொழிக்கு மறுத்துக் கூற அஞ்சும் பொருந்திய கற்பினையுடைய சுநந்தையும் ; போற்றித் தந்த புண்ணியர் கூடி - விரும்பி அழைத்துவந்த சான்றோர் கூடி; சீற்றத்துப்பின் புகழோனை - சினவலிமையுடைய புகழோனை, சீவகன் என்றே பெயரிட்டார் - (தெய்வம் கூறியவாறு) சீவகன் என்றே பெயரிட்டழைத்தனர்.
|
|
(வி - ம்.) கொல்நுனை : வினைத்தொகை. (மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பு' என்பதற்குச் 'சொல்லப்புகின். சொலும் அஞ்சும் கற்பு' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.) சீவகன் சீவித்தலையுடையவனென்று தெய்வம் வாழ்த்தினமையின் அப் பெயரே ஆயிற்று.
|
|
மாற்றம் அஞ்சும் கற்பு என்பதற்கு, கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையேயாகலின், கணவன் சொற்றிறம்புதற்கு அஞ்சும் கற்பு என்றலே நேரிதாம்.
|
( 332 ) |
362 |
மேகம் மீன்ற மின்னனை யாடன் மிளிர்பைம்பூ |
|
ணாகம் மீன்ற வம்முலை யின்பா லமிர்தேந்தப் |
|
போகம் மீன்ற புண்ணிய னெய்த கணையேபோன் |
|
மாகம் மீன்ற மாமதி யன்னான் வளர்கின்றான். |
|
(இ - ள்.) மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம்பூண் ஆகம் ஈன்ற - முகிலிடத்துத் தோன்றிய மின் போன்ற சுநந்தையின் விளங்கும் புத்தணி புனைந்த மார்பிடத்துத் தோன்றிய; அம் முலை இன்பால் அமிர்து ஏந்த - அழகிய முலைகள் இனிய பாலாகிய அமுதத்தைக் கொடுக்க; போகம் ஈன்ற புண்ணியன் - தான் சத்தியுஞ் சிவமுமாக இருந்து உலகிற்கு இன்பத்தை நல்கிய அருளாளன் ; எய்த கணையேபோல் - விட்ட அம்பான திருமால் ஆய்ப்பாடியில் நந்தகோன் மகனாக மறைய வளர்ந்ததுபோல ; மாகம் ஈன்ற மாமதி அன்னான் வளர்கின்றான் - விண்ணிலே தோன்றிய அழகுமிக்க பிறை போன்ற சீவகன் கந்துக்கடன் மகனாக வணிகர் இல்லத்திலே வளர்கின்றான்.
|
|
(வி - ம்.) 'புண்ணியன்' என்றார் திரிபுரத்தை அழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையுங் காத்தலின்.
|
|
மா - ஈண்டு அழகு. மதி - பிறை.
|
|