நாமகள் இலம்பகம் |
206 |
|
(வி - ம்.) சீவகனுடன் வளரும் பல தோழமைச் சிறுவர்களிற் சிறந்தமையின் தாமரை மலர் உவமம். உடன் வளர்வோர் சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் எனும் நால்வரும் சச்சந்தனுடைய அகப்பரிவார மகளிராகிய ஐந்நூற்றுவர் மக்கள் ஐந்நூற்றுவரும் ஆகியோர். கட்டியங்காரன் வருத்துவதால் அஞ்சிய இவர்களின் பெற்றோர்கள் இவர்களைக் கந்துக்கடனிடம் விடுத்து வளர்க்க வேண்டினர் என்பர். இவர்களிற் சச்சந்தன் அமைச்சரில் ஒருவனான சாகரனுக்கும் குருதத்தைக்கும் மகன் சீதத்தன். சச்சந்தன் படைத்தலைவன் அசலனுக்கும் திலோத்தமைக்கும் பிறந்தவன் புத்திசேனன். சச்சந்தன் நண்பனான தனபாலன் என்னும் வணிகனுக்கும் பவித்திரைக்கும் பிறந்தவன் பதுமுகன். சச்சந்தனின் மற்றொரு நண்பன் விசயதத்தனுக்கும் பிரீதிமதிக்கும் தோன்றியவன் தேவதத்தன்.
|
|
['வானிடத்துத் தேவர் முதலாயினாரிடத்தும் இன்பமுறப் பரக்கின்ற மதியாவது அறிவு, அது ஒரு வடிவு கொண்டாற் போன்றும்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.]
|
|
'குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்' (தொல்-மரபு-10) என்றதனுள், 'கூற்று' என்றதனாற், புலி முதலியவற்றிற்குக் கூறிய இளமைப் பெயர் சிங்கத்திற்குங் கொண்டார். தெய்வப் பகை - 'வால சிகிச்சை' யென்னும் நூலிற் கூறிய தெய்வப் பகை.
|
( 335 ) |
365 |
மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளமும் |
|
அணியும் பெய்யும் மாயி னேற்பார்க் கவைநல்கிக் |
|
கணிதம் மில்லாக் கற்பகங் கந்துக் கடனொத்தான் |
|
இணைவே லுண்க ணந்தையு மின்பக் கொடியொத்தாள். |
|
(இ - ள்.) மணியும் முத்தும் மாசுஅறு பொன்னும் பவளமும் அணியும் அவை - மணி முதலியவைகளை; பெய்யும் மாரியின் - பெய்கின்ற முகில் போல; ஏற்பார்க்கு நல்கி - இரப்பவர்க்குக் கொடுத்து; கந்துக்கடன் கணிதம் இல்லாக் கற்பகம் ஒத்தான்-கந்துக்கடன் அளவில் அடங்காத கற்பகத்தைப் போன்றான்; இணை வேல் உண்கண் நந்தையும் இன்பக் கொடி ஒத்தாள் - இணையாகிய வேலனைய, மைதீட்டிய கண்களையுடைய சுநந்தையும் அக் கற்பகத்திற் படரும் 'காமவல்லி' போன்றாள்.
|
|
(வி - ம்.) கற்பகம் வேண்டின பிறகே நல்கும் : மாரி வேண்டாமலே நல்கும். கந்துக்கடன் இரண்டையும் இவ் விருவகைக் கொடையாலும் ஒத்தான். [கணிதம் இல்லாக் கந்துக்கடன் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.] சுநந்தை: தலைக்குறையாக 'நந்தை' என வந்தது. இது குடுமி வைத்தற்கு முன்புள்ள கருமங்களிலும் நாடொறும் நடத்துங் கருமங்களிலும் கொடைக்கடன் அமர்ந்தமை கூறினார்.
|
( 336 ) |
366 |
சாதிப் பைம்பொன் றன்னொளி |
|
வெளவித் தகைகுன்றா |
|
நீதிச் செல்வம் மேன்மே |
|
னீந்தி நிறைவெய்திப் |
|