நாமகள் இலம்பகம் |
207 |
|
366 |
போதிச் செல்வம் பூண்டவ |
|
ரேத்தும் பொலிவின்னா |
|
லாதிக் காலத் தந்தணன் |
|
காதல் மகனொத்தான். |
|
(இ - ள்.) சாதிப் பைம்பொன் தன் ஒளி வெளவி - உயர்ந்த புதிய பொன்னின் ஒளியைக் கவர்ந்து ; நீதிச் செல்வம் மேன்மேல் நீந்தி - ஒழுங்காகிய செல்வத்தை மேலும் மேலும் அறிந்து ; நிறைவு எய்தி - கல்விக்குரிய பருவம் நிறைந்து; போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால் - அறிவாகிய செல்வத்தை அடைந்தவர் போற்றும் மேம்பாட்டினால்; ஆதிக்காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான் - முதற்காலத்து நான்முகனுக்குக் காதல் மகனான சுவாயம்பு மனுவைப் போன்றான்.
|
|
(வி - ம்.) 'சாதிப் பைம்பொன் தன்னொளி வெளவி' என்றதனால் மெய்யொளியும் நிறமும் உண்டாயினதைக் கூறினார். அந்தணன் மகன்:இயல்பான அறிவிற்கு உவமை. இனித், தீர்த்தங்கரரில் ரிஷபஸ்வாமி மகன் பரதராச சக்கரவர்த்தி யென்றும் உரைப்பர்.
|
|
நிறைவு எய்தி (கல்விகற்கும் பருவம் நிறைந்தது.) என்றதனாற் கற்பதற்குமுன் ஒழுக்கமும் இயற்கை யறிவும் அமைய வேண்டுமென்பது கருத்தாயிற்று.
|
|
'நீதிச் செல்வம் நீந்தி மேன்மேல் நிறை வெய்தி' என்று மொழி மாற்றி, 'சௌளச்சடங்கு கடந்து, நாமகளைப் புணரும் பருவம் முறையே நிறைந்து' என்று பொருள் கூறி, க்ஷத்திரியனுக்கு வைதிகம் வேண்டுதலின், சௌளத்திற்கு முன்புள்ள கன்மமும் சௌளமுங் கூறினமையான், மேலும் உபநயனம் முதலியனவும் விரியக் கூறாராயினும் அவ்விடங்களிலே குறிப்பான் உணர்க' என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். நாமகளைப் புணரும் பருவம் - கல்வி கற்கும் பருவம்.
|
( 337 ) |
வேறு
|
|
367 |
நனந்தலை யுலகின் மிக்க |
|
நன்னுதன் மகளிர் தங்கண் |
|
மனந்தளை பாய நின்ற |
|
மதலைமை யாடு கென்றே |
|
பொனங்கொடி யிறைஞ்சி நின்று |
|
பூமகள் புலம்பி வைக |
|
வனங்கனுக் கவலஞ் செய்யும் |
|
அண்ணனற் றாயு ரைத்தாள். |
|
(இ - ள்.) அனங்கனுக்கு அவலம் செய்யும் - காமனுக்குத் துன்பமூட்டும் ; அண்ணல் நற்றாய் பொன்அம் கொடி இறைஞ்சி
|
|