பக்கம் எண் :

பதிகம் 21 

   'இன்ப வெள்ளத்தையும்' என்று உம்மையும் உருபும் விரித்து, 'கல்லார் மணி'(சீவக-9) என்னும் கவி முதலியவற்றின் உம்மைகளுக்கும் இரண்டாவது (வேற்றுமை உருபு) விரித்து, 'உரைப்பாம்' என்பதனொடு முடிக்க.

 

   முற்கூறிய வீட்டை ('விருந்தார் கதி', சீவக. 28) உட்கொண்டு கூறி, அதிற் பயனும் கொண்டு கூறினார்.

 

   வான் : இடவாகு பெயர். நலத்தார்; சீவகன் மனைவியர். கேவல மடந்தை : பேரின்பமாகிய மடந்தை. ஏனோரும் - எல்லோரும். ஈனோர்-இங்குள்ளோர்.

( 24 )