பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 210 

   (இ - ள்.) கண் ஆர் பூமகள் பொலிந்த மார்பன்-கண்ணுக்கு நிறைந்த, திருமகள் தங்கிய மார்பனான சீவகன்; நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன்பருகி - நாமகளின் அழகையெல்லாம் விரும்பிச் சேரக் கற்று ; நல்நூல் ஏ முதலாய எல்லாப் படைக்கலத் தொழிலும் முற்றி - நல்ல படைக்கல நூல்களிற் கூறியவாறு அம்பு முதலாகிய எல்லாப் படைக்கலப் பயிற்சிகளையும் முற்றக் கற்று; காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு - காமனும் உளமுருகுமாறு அமைத்த இசையையும் கரைகண்டு; புவிமிசைத் திலகம் ஒத்தான் - நிலமகள் நெற்றியில் திலகம் போன்றான்.

 

   (வி - ம்.) சொல்லாற் கூறுவன எல்லாம் அடங்குதற்கு, 'எல்லாம்' என்றார். ['பருகி' எனவே தன் குலத்திற்குரிய வேதமும் அதிகரிக்க வேண்டுதலின் ஈண்டே உபநயனமுங் கூறினார், இது, 'சாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான்' (சீவக - 2038) என்பதனானும் பிறவற்றானும் உணர்க - நச்சி.] புலம் - அறிவு. அது நூலுக்கானதல் காரிய ஆகுபெயர்.

 

   இசை கூறவே கூத்தும் அடங்கும். முன் நூல்களைக் கற்றதற் கேற்பத் தொழில்களைக் கற்றாறென்றார்.

 

   நாமகணலம் - கலையழகு. நயத்துடன் பருகி என்றதனால் பருகுவார் அன்ன ஆர்வமுடையராய்க் கற்கும் தலைமாணார்க்கர் தன்மை யுடையனாய் என்பது போதரும். கலை உணர்ச்சியால் நுகர்வதாகலின் பருகி என்றார். காமனுங் கனியவைத்த புலம் என்றது இசையையும் நாடகத்தையும். பூமகள் பொலிந்த மார்பன் நாமகள் பொலிந்த உளத்தனாய்த் திலகம் ஒத்தான் என்க.

( 341 )
371 மின்றெளித் தெழுதி யன்ன
  விளங்குநுண் ணுசுப்பி னல்லார்
பொன்றெளித் தெழுதி யன்ன
  பூம்புறப் பசலை மூழ்கிக்
குன்றொளித் தொழிய நின்ற
  குங்கமத் தோளி னாற்குக்
கன்றொளித் தகல வைத்த
  கறவையிற் கனிந்து நின்றார்.

   (இ - ள்.) மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - மின்னை நிலைபெற நிற்கத் தெளிவித்து அதனிடத்தே மகளிர் உறுப்புக்களை எழுதிவைத்தாற் போல விளங்கும் நுண்ணிடை மகளிர்; பொன் தெளித்து எழுதி அன்ன பூம்புறப் பசலை மூழ்கி-பொன்னைத் தெளித்து எழுதினாற் போன்ற தம் பொலிவுடைய மெய்யிலே தோன்றிய பசலையில் முழுகி ; குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்கு -