நாமகள் இலம்பகம் |
212 |
|
வேலினும் வெய்யகண் என்றது அல்குல் விற்றற்குக் குறிப்பேது வாய் நின்றது. 'களவு குடிகொள்ளும் கண்' என்ற நச்சினார்க்கினியர் விளக்கத்திற்குரிய சொற்கண்டிலேம். முரிவிலர்: முற்றெச்சம். கலையிகந்து என்புழி இகந்து என்பதனை இகந்த எனத் திரித்துக்கொள்க.
|
( 343 ) |
373 |
வான்சுவை யமிர்த வெள்ளம் |
|
வந்திவண் டொக்க தென்னத் |
|
தான்சுவைக் கொண்ட தெல்லாந் |
|
தணப்பறக் கொடுத்த பின்றைத் |
|
தேன்சுவைத் தரற்றும் பைந்தார்ச் |
|
சீவக குமர னென்ற |
|
ஊன்சுவைத் தொளிரும் வேலாற் |
|
குறுதியொன் றுரைக்க லுற்றான். |
|
(இ - ள்.) வான் சுவை அமிர்தம் எல்லாம் வந்து இவண் தொக்கது என்ன - வானவருண்ணும் சுவைதரும் அமிர்தம் எல்லாம் இங்கு வந்து குவிந்தாற் போன்று ; தான் சுவைக் கொண்டது எல்லாம் - தான் சுவைத்துக் கொண்டதை யெல்லாம் ; தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற - வண்டுகள் தேனைச் சுவைத்து முரலும் புதிய தாரணிந்த சீவகன் என்னும்; ஊன் சுவைத்து ஒளிரும் வேலாற்கு-ஊனைச் சுவை பார்த்து விளங்கும் வேலேந்தியவனுக்கு; தணப்பு அறக்கொடுத்த பின்றை-தடையின்றிக் கொடுத்தபிறகு; உறுதி ஒன்று உரைக்கலுற்றான் - நலமொன்றைக் கூறத் தொடங்கினான் ஆசிரியன்.
|
|
(வி - ம்.) கொண்ட தெல்லாம்: ஒருமைப் பன்மை மயக்கம். ['வான்சுவை அமிர்தவெள்ளம் வந்து இவண் தொக்கதென்ன உறுதி யொன்றுரைக் கலுற்றான்' என்றுங் கூட்டலாம் என்பர் நச்சினார்க்கினியர்.]
|
|
இச்செய்யுள் கலையின்பத்திற்கு அழகான உவமை எடுத்துக் கூறுகின்றது. கலையைச் சுவையமிர்தம் எனவே அதனை நுகர்வோர் 'அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் எனவும், தான் சுவைக்கொண்டதெல்லாம் எனவே, 'தாமின்புறுவது எனவும் வரும் வள்ளுவர் அருள்வாக்கு நினைவில் முகிழ்க்கின்றன.
|
( 344 ) |
374 |
நூனெறி வகையி னோக்கி |
|
நுண்ணிதி னுழைந்து தீமைப் |
|
பானெறி பலவூக்கிப் |
|
பருதியங் கடவு ளன்ன |
|