பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 219 

383 விரிமலர்க் கண்ணி கட்டி
  விழைதக வேய்ந்த போலுந்
தெரிமலர்க் காவு சோ்ந்து
  பிறப்பினைத் தெருட்ட லுற்றான்.

   (இ - ள்.) எரி முயங்கு இலங்கு வைவேல் இளையவர் குழாத்தின் நீங்கி - அனல் தழுவி விளங்கும் கூரிய வேலணிந்த இளைஞர்களின் குழுவிலிருந்து நீங்கி; திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் வேறா கொண்டு - திருமகள் தழுவும், மாலையணிந்த மார்பினையுடைய சீவகனைத் தனியே அழைத்துச் சென்று; விரி மலர்க்கண்ணி கட்டி விழைதக வேய்ந்தபோலும் - மலர்ந்த மலர்களைக் கண்ணியாகக்கட்டி விருப்பமுண்டாமாறு வேய்ந்தாற் போன்றமைந்த ; தெரிமலர்க்காவு சேர்ந்து-விளங்கும் மலர்பொழில் அடைந்து; பிறப்பினைத் தெருட்டல் உற்றான் - (சீவகன்) பிறப்பினை (ஆசிரியன்) தெளிவிக்கத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) இளையவர்: நபுல விபுலராகிய (சச்சந்தன் காமக்கிழத்தியர் மக்களாகிய) இருவரும், கந்துக்கடனுக்குச் சீவகன் கிடைத்த பின்னர் சுநந்தை வயிற்றிற் பிறந்த நந்தட்டனும் ஆகிய தம்பியரும், முற்கூறிய நால்வரும் ஐந்நூற்று வரும் ஆகிய தோழரும் ஆவர்.

 

   வேறாக்கொண்டு என மாறுக. ஆசிரியன் என்னும் எழுவாய் வருவித்தோதுக.

( 354 )
384 பூவையுங் கிளியு மன்ன
  ரொற்றெனப் புணர்க்குஞ் சாதி
யாவையு மின்மை யாராய்ந்
  தந்தளிர்ப் பிண்டி நீழற்
பூவிய றவிசி னுச்சிப்
  பொலிவினோ டிருந்த போழ்தி
லேவியல் சிலையி னானை
  யிப்பொருள் கேண்மோ வென்றான்.

   (இ - ள்.) பூவையும் கிளியும் மன்னர் ஒற்று எனப் புணர்க்கும் சாதி யாவையும் இன்மை ஆராய்ந்து- பூவை கிளி போன்ற அரசர்கள் ஒற்றாக விடும் சாதிகளெல்லாம் அக்காவின் கண் இல்லாத படியே ஆராயந்து; அம் தளிர்ப்பிண்டி நீழல் பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த போழ்தில் - அழகிய தளிரையுடைய அசோகின் நீழலில் பூவால் அமைத்த இருக்கையின்மேல் ஆசிரியன் சிறப்புற அமர்ந்த பிறகு; ஏ இயல் சிலையினானை இப்பொருள் கேண்மோ என்றான் - அம்பு பயிலும்