பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 220 

வில்லினானை இக் கதையைக் கேட்பாயாக என்று கூறத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) பூவை - நாகண வாய்ப்புள். இன்னோரன்ன சாதி என்க. சிலையினான்: சீவகன்.

( 355 )
385 வையக முடைய மன்னன்
  சச்சந்த னவற்குத் தேவி
பைவிரி பசும்பொ னல்குற்
  பைந்தொடி விசையை யென்பாள்
செய்கழல் மன்னன் றோ்ந்து
  தேவியைப் பொறியிற் போக்கி
மையல்கொ ணெஞ்சிற் கல்லா
  மந்திரி விழுங்கப் பட்டான்.

   (இ - ள்.) வையகம் உடைய மன்னன் சச்சந்தன் - இவ்வுலகுடை மன்னன் சச்சந்தனென்பான்; அவற்குத் தேவி பைவிரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசயை என்பாள் - அவனுக்குத் தேவி பாம்பின் படம் என விரிந்த, பசும்பொன் மேகலை சூழ்ந்த அல்குலையும் பைந்தொடியையும் உடைய விசயை எனப்படுவாள்; செய்கழல் மன்னன் தேர்ந்து - கழலணிந்த சச்சந்தன் தன் அமைச்சன் கட்டியங்காரனின் சூழ்ச்சியை அறிந்து; தேவியைப் பொறியில் போக்கி - தன் காதலியை மயிற் பொறியிலே தப்பிப் போகவிட்டு; மையல் கொள் நெஞ்சன் - மயக்கமுற்ற நெஞ்சினனான ; கல்லா மந்திரி விழுங்கப்பட்டான் - அறிவற்ற மந்திரியினாற் கொல்லப்பட்டான்.

 

   (வி - ம்.) பொன்-மேகலை (கருவியாகுபெயர்). தேர்ந்து - கனவிற்குப் பிறகு விசயையைப் போக விடஎண்ணி. மையல்- 'தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைக்' கொல்லுதல்.

 

   சீவகன் கடைபோகக் கேட்கும்பொருட்டு இச்செய்தியைப் பழங்கதையொன்றனைக் கூறுமாறுபோலக் கூறினன் என்பது கருத்து. இக்கருத்தால் நின்தந்தை தாய் என்னாமல் சச்சந்தன் என்றும் அவற்குத் தேவி என்றும் ஏதிலார்போலக் கூறினன். கல்லா மந்திரி என்றது கட்டியங்காரனை. விழுங்கப்பட்டான் என்பதற்கேற்ப மந்திரிமாநாகத்தால் என்க.

( 356 )
386 புலம்பொடு தேவி போகிப்
  புகழ்கருங் காடு நண்ணி
வலம்புரி யுலகம் விற்கு
  மாமணி யீன்ற தென்ன