நாமகள் இலம்பகம் |
222 |
|
(வி - ம்.) கொழுந்தென்றார் நாடோறும் வளர்தலின். ஊனம் - நாட்களுக்குள்ள தீங்கு.
|
|
தானம், இடம். அஃதாவது சுடுகாடு. மணிகளின் ஒளிமழுங்கத் தன்மேனி மிக்கு மிளிர என்பார் மணியும் தானும் இரட்டுற என்றார்.
|
|
உத்திரட்டாதியான்-உத்திரட்டாதிநாளிற் றோன்றியவன்.
|
( 358 ) |
388 |
அருந்தவன் முந்து கூற |
|
வலங்கல்வே னாய்கன் சென்று |
|
பொருந்துபு சிறுவற் கொண்டு |
|
பொலிவொடு புகன்று போகத் |
|
திருந்திய நம்பி யாரத் |
|
தும்மினன் றெய்வம் வாழ்த்திற் |
|
றரும்பொனாய் கொண்மோ வென்றா |
|
னலைகடல் விரும்பிற் கொண்டாள். |
|
(இ - ள்.) அருந்தவன் முந்து கூற -அரிய தவமுனி ஒருவன் முன்னர்க் கூறிய தனால்; அலங்கல் வேல் நாய்கன் சென்று பொருந்துபு சிறுவற் கொண்டு - மாலை அணிந்த வேலையுடைய வணிகன் ஒருவன் இறந்த மகனொடு அங்கே சென்று தன் மகனைக் கிடத்திவிட்டு அச் சிறுவனைப் பொருந்தி எடுக்க; திருந்திய நம்பி ஆரத் தும்மினன் - விளக்கமுடைய அச் சிறுவன் நன்றாகத் தும்மினான்; தெய்வம் வாழ்த்திற்று - அச் சிறுவனைக் காத்திருந்த சுடுகாட்டுத் தெய்வம் வாழ்த்தியது; பொலிவொடு புகன்று போக - கேட்ட வணிகன் விளக்கமுற விருப்பமொடு எடுத்துச் சென்று; அரும்பொனாய்! கொண்மோ என்றான் - அரிய திருமகள் போன்றவளே! இதனைக் கொள்க என்றான்; அலைகடல் விருப்பிற் கொண்டாள் - அவளும் கடலைப் போன்ற விருப்பத்துடன் வாங்கிக் கொண்டாள்.
|
|
(வி - ம்.) கொண்டு - கொள்ள ; போக - போய் ; வினையெச்சத் திரிபுகள்.
|
|
நாய்கன் என்றது கந்துக்கடனை.
|
( 359 ) |
389 |
கரியவன் கன்னற் கன்று |
|
பிறப்பினைத் தேற்றி யாங்கப் |
|
பெரியவன் யாவ னென்ன |
|
நீயெனப் பேச லோடுஞ் |
|
சொரிமலர்த் தாரும் பூணு |
|
மாரமுங் குழையச் சோரத் |
|
திருமலர்க் கண்ணி சிந்தத் |
|
தெருமந்து மயங்கி வீழ்ந்தான். |
|