நாமகள் இலம்பகம் |
224 |
|
391 |
இனையைநீ யாய தெல்லா |
|
மெம்மனோர் செய்த பாவ |
|
நினையனீ நம்பி யென்று |
|
நெடுங்கணீர் துடைத்து நீவிப் |
|
புனையிழை மகளிர் போலப் |
|
புலம்பனின் பகைவ னின்றா |
|
னினைவெலா நீங்கு கென்ன |
|
நெடுந்தகை தேறி னானே. |
|
(இ - ள்.) நம்பி நீ இனையை ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் - நம்பியே நீ இந்நிலையினை ஆனதெல்லாம் எம்போல்வார் செய்த தீவினை; நீ நினையல் என்று - நீ (சென்றதை) நினையாதே என்று ; நெடுங்கண் நீர் துடைத்து, நீவி - நீண்ட கண்களினின்று வடியும் நீரைத் துடைத்து; மெய்யைத் தடவிக் கொடுத்து; நின் பகைவன் நின்றான் - நின் பகைவன் இருக்கிறான் (ஆதலின்;) புனை இழை மகளிர் போலப் புலம்பல் - அணிகலன் அணிந்த பெண்களைப் போல வருந்தாதே ; நினைவு எலாம் நீங்குக என்ன - எல்லாக் கவலைகளையும் விடுக என்று (ஆசிரியன் தேற்ற); நெடுந்தகை தேறினான் - சீவகன் தெளிந்தான்.
|
|
(வி - ம்.) 'நீர்துடைத்து' என்றது அரற்று. (யாது செய்சேவனென்றல்.) 'நினைவெலாம்' என்றது அவலம் (வருத்தம்). இங்ஙனம் அவலம், கவலை, அரற்று, கையாறு என்னும் நான்கு மெய்ப்பாடும் கூறப்பட்டமை தெளிக.
|
|
'எம்மனோர் செய்த பாவம் நீக்குகை காரணமாக நினையல்' என்றும் ஆம்.
|
( 362 ) |
392 |
மலைபக விடிக்குஞ் சிங்க |
|
மடங்கலின் முழங்கி மாநீ |
|
ரலைகடற் றிரையிற் சீறி |
|
யவனுயிர் பருக லுற்றுச் |
|
சிலையொடு பகழி யேந்திக் |
|
கூற்றெனச் சிவந்து தோன்று |
|
மிலையுடைக் கண்ணி யானை |
|
யின்னணம் விலக்கி னானே. |
|
(இ - ள்.) அவன் உயிர் பருகல் உற்று - கட்டியங்காரன் உயிரை உண்ண விரும்பி; மலைபக இடிக்கும் சிங்க மடங்கலின் முழங்கி - மலை பிளக்கத் தகர்க்கும் சிங்கக்குட்டி போல முழங்கி ; மாநீர் அலைகடல் திரையின் சீறி - பெரிய நீர்ப்பரப்பான கடலலை போல ஆர்த்து ; சிலையொடு பகழி ஏந்தி - வில்லையும்
|
|