| நாமகள் இலம்பகம் |
226 |
|
| 394 |
வெவ்வினை வெகுண்டு சாரா விழுநிதி யிமிர்த மின்னீர் |
| |
கவ்விய வெஃகி னின்ற கயக்கமி னிலைமை நோக்கி |
| |
யவ்விய மகன்று பொங்கு மழற்படு வெகுளி நீக்கி |
| |
யிவ்விய லொருவற் குற்ற திற்றெனக் கிளக்க லுற்றான். |
|
|
(இ - ள்.) அழல் படு வெகுளி நீக்கி - சீவகனுக்கு வந்த வெய்ய சினத்தை இங்ஙனம் மாற்றி ; அவ்வியம் அகன்று - மனக் கோட்டம் இன்றி ; வெவ்வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் - தீவினையை வெகுண்டதனால் அது சாராத சிறந்த நிதியாகிய அமிர்தம் ; எஃகு கவ்விய இன்னீரின் நின்ற - இரும்பு உண்ட இனிய நீரைப்போல நின்ற ; கயக்கம் இல் நிலைமை நோக்கி - கலக்கம் அற்ற நிலைமையைப் பார்த்து; ஒருவற்கு உற்றது இவ்வியல் இற்று எனக் கிளக்கல் உற்றான் - ஒருவனுக்கு நேர்ந்ததான இத் துன்பம் இத் தன்மையானது என்று இயம்பலுற்றான்.
|
|
|
(வி - ம்.) அமிர்தம் : இரத்தினத்திரயம். 'இவ்வியல் ஒருவன்' என்று தன்னைப் பிறன்போல் கூறினான், தன்மேல் அன்பால் வருந்துவன் என்று கருதி. மற்றும், சீவகன் மெய்யுணர்தலின் தன்னை விலக்கானென்று இக்கதை கூறுகிறோன்.
|
( 365 ) |
| 395 |
வானுறை வெள்ளி வெற்பின் |
| |
வாரண வாசி மன்ன |
| |
னூனுறை பருதி வெள்வே |
| |
லுலோகமா பால னென்பான் |
| |
றேனுறை திருந்து கண்ணிச் |
| |
சிறுவனுக் கரசு நாட்டிப் |
| |
பானிறக் குருகி னாய்ந்து |
| |
பண்ணவர் படிவங் கொண்டான். |
|
|
(இ - ள்.) வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன் - வானுலகில் உள்ள வெள்ளிமலையில் வாரணவாசியென்னும் ஊரின் மன்னனாகிய ; ஊன் உறை பருதி வெள்வேல் உலோக மாபாலன் என்பான் - ஊன் தங்கிய , ஞாயிறு போன்ற வெள்ளிய வேலேந்திய உலோக மாபாலன் என்பவன்; தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நல்கி - தேன் பொருந்திய அழகிய கண்ணியை உடைய மகனுக்கு அரசினைக் கொடுத்துவிட்டு; பால் நிறக் குருகின் ஆய்நது - வெண்ணிற அன்னம் போல ஆராய்ந்து (தீமையை விலக்கி நன்மையைக் கொண்டு); பண்ணவர் படிவம் கொண்டான்- தவத்தினர் வடிவம் கொண்டான்.
|
|