நாமகள் இலம்பகம் |
227 |
|
(வி - ம்.) பருதிபோற் பகையாகிய இருளைக் கெடுக்கும் வேல். உலோகமா பாலன் : மா: வியங்கோளசையன்றி இசை நிறைத்து நின்றது ; புறனடையான் வந்தது (தொல். இடை. 48) ; 'ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே ' (புறநா. 193) என்றாற்போல.
|
( 366 ) |
396 |
வெஞ்சினங் குறைந்து நீங்க |
|
விழுத்தவந் தொடங்கி நோற்கும் |
|
வஞ்சமில் கொள்கை யாற்குப் |
|
பாவம்வந் தடைந்த தாகக் |
|
குஞ்சர முழங்கு தீயின் |
|
கொள்கையின் மெலிந்திம் மூதூர் |
|
மஞ்சுதோய் குன்ற மன்ன |
|
மாடவீட் டகம்பு குந்தான். |
|
(இ - ள்.) வெம் சினம் குறைந்து நீங்க - கொடுஞ் சினம் குறைந்து நீங்கும்படி; விழுத்தவம் தொடங்கி நோற்கும் வஞ்சம் இல் கொள்கையாற்கு - சிறந்த தவத்தைத் தொடங்கி நோற்கும் தூய கொள்கையையுடைய அவனுக்கு ; பாவம் வந்து அடைந்ததாக - தீவினைப் பயன் வந்து சேர்ந்ததாக; முழங்கு குஞ்சரத் தீயின் - தணிவற்ற யானைத்தீ என்னும் நோயால்; கொள்கையின் மெலிந்து - தவம்புரிய இயலாமற் பசியினால் வாடி ; இம் மூதூர் - இப் பழம் பதியிலே ; மஞ்சுதோய் குன்றம் அன்ன மாட வீட்டகம் புகுந்தான் - முகில் தவழும் மலையனைய மாடங்களின் இடையே நுழைந்தான்.
|
( 367 ) |
397 |
உரைவிளை யாமை மைந்தன் |
|
கேட்கிய வுவந்து நோக்கி |
|
வரைவிளை யாடு மார்பன் |
|
யாரவன் வாழி யென்ன |
|
விரைவிளை யாடுந் தாரோய் |
|
யானென விரும்பித் தீம்பாற் |
|
றிரைவிளை யமிர்த மன்ன |
|
கட்டுரை செல்க வென்றான். |
|
(இ - ள்.) உரை விளையாமை மைந்தன் உவந்து கேட்கிய நோக்கி - கதை முடிவதற்கு முன்னரே சீவகன் மகிழ்வுடன் (ஐயம் நீங்க) கேட்பதற்கு நோக்கி; 'வரை விளையாடு்ம் மார்பன் யார் அவன் வாழி' என்ன - மலை தனக்கு நிகராகக் கருதி விளையாடும் மார்பினனாகிய அவன் யார்? அவன் வாழ்க!' என்று வினவ ; 'விரை விளையாடும் தாரோய்! யான்' என - 'மணம்
|
|