பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 228 

உலவும் தாரினனே! அவன் யானே' என்று ஆசிரியன் கூற; விரும்பி - மேலே கேட்க விழைந்து; திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான் - 'கடலில் விளைந்த அமிர்தம் போன்ற கதை மேலும் செல்வதாக' என்று சீவகன் வேண்டினான்.

 

   (வி - ம்.) விளையாமை - முற்றுமுன்னர். கேட்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வரைவிளையாடும் மார்பன் என்றது மலையே தனக்கு நிகரென்று கருதி அதனோடு விளையாடுதற்குக் காரணமான மார்பையுடையன் என்றவாறு. விரை - நறுமணம். தீம்பால் திரை - பாற்கடல்.

( 368 )
398 பூத்தின்று புகன்று சேதாப்
  புணர்முலை பொழிந்த தீம்பா
னீத்தறச் செல்ல வேவித்
  தட்டவின் னமிர்த முண்பான்
பாத்தரும் பசும்பொற் றாலம்
  பரப்பிய பைம்பொற் பூமி
யேத்தருந் தவிசி னம்பி
  தோழரொ டேறி னானே.

   (இ - ள்.) சேதா பூத்தின்று புகன்று புணர்முலை பொழிந்த தீம்பால் - சிவப்புப் பசு மலர்களைத் தின்று விருப்பத்துடன் முலைகளில் இருந்து பெய்த இனிய பால்; நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான் - முற்றும் வற்றிக் கலக்க வேகவைத்துச் சமைத்த இனிய அடிசிலை உண்பதற்கு; பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி - தூய பசும் பொன் கலங்கள் பரப்பிய பொன் நிலத்திலே; ஏத்தருந் தவிசின் - புகழ்தற்கரிய இருக்கையிலே; நம்பி தோழரொடு ஏறினான் - கந்துகன் தோழரோடு அமர்ந்தான்.

 

   (வி - ம்.) சேதா : பண்புத்தொகை. பாத்தல் அரும்பசும் பொன் - (இனியும் குற்றமின்மையால்) பிரிக்கவியலாத பசும் பொன் : ஓட்டற்ற பொன்.

( 369 )
399 புடையிரு குழையு மின்னப்
  பூந்துகில் செறிந்த வல்கு
னடையறி மகளி ரேந்த
   நல்லமிர் துண்ணும் போழ்தி
னிடைகழி நின்ற வென்னை
  நோக்கிப்போந் தேறு கென்றான்
கடல்கெழு பருதி யன்ன
  பொற்கலத் தெனக்கு மிட்டார்.