நாமகள் இலம்பகம் |
229 |
|
(இ - ள்.) பூந்துகில் செறிந்த அல்குல் நடை அறி மகளிர் - அழகிய ஆடையணிந்த அல்குலையுடைய, உணவு படைக்கும் முறை யறிந்த பெண்கள்; புடை இரு குழையும் மின்ன ஏந்த - இருபுறத்தினும் குழைகள் ஒளிவிடக் கைகளில் ஏந்தி நிற்க; நல் அமிர்து உண்ணும் போழ்தின் - நல்ல உணவை உண்ணும்போது; இடைகழி நின்ற என்னை நோக்கி - இடைகழியிலே நின்ற என்னைக் (கந்துகன்) பார்த்து; போந்து ஏறுக என்றான் - வந்து அமர்க என்று கூறினான்; கடல்கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார் - கடலில் தோன்றும் காலை ஞாயிறு போன்ற பொன் வட்டிலில் எனக்கும் உணவு படைத்தனர்.
|
|
(வி - ம்.) நடை என்றது சோறிடு முறைமையினை. இடைகழி -இல்லத்தில் ஓருறுப்பு; ரேழி என இக்காலத்தார் கூறுவதுமிது.
|
( 370 ) |
400 |
கைகவி நறுநெய் பெய்து |
|
கன்னலங் குடங்கள் கூட்டிப் |
|
பெய்பெயென் றுரைப்ப யானும் |
|
பெருங்கடல் வெள்ளிக் குன்றம் |
|
பெய்துதூர்க் கின்ற வண்ணம் |
|
விலாப்புடை பெரிதும் வீங்க |
|
வையன தருளி னால்யா |
|
னந்தணர் தொழில னானேன். |
|
(இ - ள்.) கைகவி நறு நெய்பெய்து- (உணவிலே) போது மென்னும் அளவும் நல்ல நெய்யை வார்த்து ; கன்னல் அம் குடங்கள் கூட்டிப் பெய் பெய் என்று உரைப்ப - சருக்கரைக் குடங்களைச் சேர்த்துப் பெய் பெய் என்று கந்துகன் (பணி மகளிர்க்குக்) கூற; (அவர்கள் சொரிதலின்) யானும் பெருங் கடல் வெள்ளிக்குன்றம் பெய்து தூர்க்கின்ற வண்ணம் - நானும் பெரிய கடலிலே வெள்ளி மலைகளைப் பெய்து தூர்ப்பதைப்போல; விலாப்புடை பெரிதும் வீங்க - விலாவின் பக்கம் பெரிதும் பருக்கத் (தூர்த்து); ஐயனது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன் - கந்துகன் அருளால் யான் அந்தணர் போல உண்டு அமைந்தேன்.
|
|
(வி - ம்.) [ஐயன் - சீவகன் என்பர் நச்சினார்க்கினியர். 'ஐயனாகிய நின் அருளால்' என்பர்]
|
|
விரைவினால். 'பெய் பெய்' என்று அடுக்கி வந்தன. இது இக்கால வழக்கு. 'விரைசொல் அடுக்கே மூன்று வரம்பாகும்' (தொல்- எச்ச-28.) அந்தணர் -அறவோர். இவர் தொழில் அமைதி அடைதல்.
|
|
கைகவி நறுநெய்-உண்போர் போதும் போதும் என்று கைகவித்து மறுக்குமளவும் பெய்யப்பட்ட நறிய நெய் என்றவாறு. ”பூக்கமழ்
|
|