பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 230 

தேறல் வாக்குபு தரத்தர வைகல் வைகல் கைகவி பருகி” (157-8)என்றார் பொருநராற்றுப்படையினும்.

 

   'ஐயன்' என்பது சீவகனைக் குறிப்பதாகக் கோடலே காப்பியத்திற்குச் சிறப்பாகும். ஐயன் : முன்னிலைப் புறமொழி.

( 371 )
401 சுரும்புடை யலங்கன் மாலைச்
  சுநந்தையுந் துணைவன் றானும்
விரும்பின ரெதிர்கொண் டோம்ப
  வேழவெந் தீயி னீங்கி
யிருந்தன னேம முந்நீ
  ரெறிசுற வுயர்த்த தோன்றல்
கரும்புடைக் காளை யன்ன
  காளைநின் வலைப்பட் டென்றான்.

   (இ - ள்.) சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் - வண்டுகளையுடைய அசைதலையுடைய மாலை அணிந்த சுநந்தையும் கந்துக்கடனும்; விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப - விரும்பி வரவேற்றுப் பேண; ஏமம் முந்நீர் ஏறி சுறவு உயர்த்த தோன்றல் கரும்புடைக் காளை அன்ன - காவலாகிய கடலில் துள்ளும் சுறாமீனை மேம்படுத்திய கொடியையுடைய தோன்றலாகிய, கரும்பை வில்லெனக் கொண்ட காளையைப் போன்ற; காளை நின் வலைப்பட்டு - காளையாகிய உன் தொடர்பிலே அகப்பட்டு; வேழ வெந்தீயின் நீங்கி இருந்தனன் என்றான். கொடிய யானைத் தீயிலிருந்து நீங்கித் தங்கினேன் என்றான்.

 

   (வி - ம்.) காளையின் வலையிற் பட்டதையும் யானைத் தீயினின்றும் நீங்கியதையும் மேல் வருவனவற்றால் அறியலாம்.

 

   இவற்றை விளக்கிப் போகக் கருதியதனால், 'வலைப்பட்டு' என்றான்.

 

   விரும்பினர் : முற்றெச்சம். வேழவெந்தீ - யானைத்தீ என்னும் நோய். ஏமமுந்நீர் - உலகிற்குப் பாதுகாவலாகிய கடல். எறிசுறவு : வினைத்தொகை. கரும்புடைக் காளை - காமன். காளை : அண்மைவிளி.

( 372 )
402 நிலம்பொறுக் கலாத செம்பொ
  னீணிதி நுந்தை யில்ல
நலம்பொறுக் கலாத பிண்டி
  நான்முகன் றமர்கட் கெல்லா
முலம்பொறுக் கலாத தோளா
  யாதலா லூடு புக்கேன்
கலம்பொறுக் கலாத சாய
  லவருழை நின்னைக் கண்டேன்.