பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 232 

அதகம் மாற்றி யாங்கு' (கல்-நிணமுயிருண்ட - 8). தழங்குரல் : தழங்குகுரல் என்பதன் விகாரம்.

 

   'வேழவெந்தீயின் நீங்கி' என்றும், (401) 'யானைத்தீ வட்க' என்றும் (403) இருமுறை வருதலால்' 'இவனிருக்கின்ற மனையாதலின் இவனைக் காண்பதற்கு முன்னே குறைந்து, இவனைக் கண்டபின் பொன்றக் கெட்டது' என்பர் நச்சினார்க்கினியர்

( 374 )
404 கோட்டிளந் திங்கள் சூழ்ந்து
  குலவிய திருவிற் போல
மோட்டொளி முத்தஞ் சூழ்ந்து
  முருகுகொப் புளிக்குந் தாரோய்
கேட்டளப் பரிய சொல்லுங்
  கிளரொளி வனப்பு நின்னைச்
சேட்டிளஞ் சிங்க மன்னாய்
  சாதகஞ் செய்த வென்றான்.

   (இ - ள்.) கோடு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல - இரு முனைகளையுடைய பிறைமதியைச் சூழ்ந்து விளங்கும் வானவில்லைப் போல; மோடு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்புளிக்கும் தாரோய் - பெருமைமிக்க ஒளிரும் முத்த மாலையைச் சூழ்ந்து தேனை உமிழும் மலர்மாலையாய்!; சேடு இளஞ்சிங்கம் அன்னாய் - பெருமையுடைய இளஞ் சிங்கம் போன்றவனே!; கேட்டு அளப்ப அரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் - கேட்டு அளவிடற்கியலாத சொல்லழகும் விளங்கும் மேனியழகும்; நின்னைச் சாதகம் செய்த என்றான் - நின் பிறப்பை அறிவித்தன என்று கூறினான்.

 

   (வி - ம்.) கோடு - நுனி. திருவில் - வானவில். மோடு-பெருமை. முருகு - தேன். சேடு - பெருமை. சாதகம்- பிறப்பு.

( 375 )
405 கோளியங் குழுவை யன்ன
  கொழுஞ்சிலை யுழவன் கேட்டே
தாளிய றவங்க டாயாத்
  தந்தைநீ யாகி யென்னை
வாளியங் குருவப் பூணோய்
  படைத்தனை வாழி யென்ன
மீளியங் களிற னாயான்
  மெய்ந்நெறி நிற்ப லென்றான்.

   (இ - ள்.) கோள் இயங்கு உழுவை அன்ன கொடுஞ்சிலை உழவன் கேட்டு - கொலைத்தொழிலிலே பயிலும் புலியனைய,