|
235 |
|
2. கோவிந்தையார் இலம்பகம்
|
|
(கதைச் சுருக்கம்)
|
|
சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; அவற்றை வேடர்கள் கவர்ந்து கொண்டு சென்றனர். ஆயர்கள் அவற்றை மீட்கும் மதுகையிலராய் ஓடிவந்து கட்டியங்காரனிடத்தே முறையிட்டனர். கட்டியங்காரன் சினந்து தன் மக்கள் நூற்றுவரையும், தன் மைத்துனன் மதனனையும் ஆனிரையை மீட்டுவரும்படி ஏவினான். அவரெல்லாம் அவ்வேடர்க்கு எதிர்நிற்றலாற்றாதவராய் வறிதே மீண்டனர். அஃதறிந்த கட்டியங்காரன் வாளா விருந்தனன்.
|
|
ஆயர் தலைவனாகிய நந்தகோன் இச் செய்தியறிந்து பெரிதும் வருந்தி, இந்நிரையை வேடரை வென்று மீட்டு வருகின்றவனுக்கு என் மகளாகிய கோவிந்தையை அளிப்பேன் எனத் தெருத்தோறும் முரசறைவித்தனன். மறவர் பலரும் வேடர்க்கு அஞ்சி வாளா விருந்தினர். அஃதறிந்த சீவகன் சூளுரைத்துப் போர்க் கோலங் கொண்டு சென்று, அவ்வேடரொடு போர் செய்து அவரையெல்லாம் கொல்லாமல் அஞ்சி ஓடும்படி செய்தனன். சீவகன் நிரைமீட்டமை அறிந்த நந்தகோன் கோவிந்தையைச் சீவகனுக்குக் கொடுக்க முன்வந்தான். ஆயினும் சீவகன் அவ்வழகியைத் தான் ஏற்றுக்கொள்ளாமல், தன் தோழனாகிய பதுமுகனுக்கு மணஞ்செய்வித்தனன்.
|
|
409 |
ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய் |
|
வீரன் றாணிழல் விளங்க நோற்றபின் |
|
மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழச் |
|
சோர்வில் கொள்கையான் றோற்றம் நீங்கினான். |
|
(இ - ள்.) அச்சணந்தி போய் ஆர்வ வேர் அரிந்து - அச்சணந்தி இராசமா புரத்தினின்றும் போய் ஆசையை வேர்களைந்து; வீரன் தாள் நிழல் விளங்க நோற்றபின் - ஸ்ரீவர்த்தமானரின் திருவடி நிழலில் விளங்குமாறு நோற்ற பிறகு; சோர்வு இல் கொள்கையான் - தளராத அக்கொள்கையால் ; விண்தொழமாரி மொக்குளின் மாய்ந்து - வானவர் தொழுமாறு; மழையிலுண்டாம் நீர்க்குமிழி போல மாய்ந்து; தோற்றம் நீங்கினான் - பிறவியை விட்டான்.
|
|
(வி - ம்.) ஆர்வவேர் : பிறவிவேர். தாள் நிழலைச் 'சமவ சரணம்' என்பர் சைனர். ஸ்ரீ வர்த்தமானர் : சைன நூல்களிற் கூறப்படும்
|
|