கோவிந்தையார் இலம்பகம் |
236 |
|
தீர்த்தங்கரர்களில் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர். இவரை வீரரென்றும் விளம்புவர். மொக்குளின் மாய்தலை வீடுபெறுங்கால் திரு மேனியுடனே மறைதல் என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
ஆர்வம் : ஆகுபெயர். வேர்போறலின் வேர் என்றார். அச்சணந்தி - சீவகன் நல்லாசிரியன். விண் : ஆகுபெயர் ; அமரர். தோற்றம்-பிறப்பு.
|
( 1 ) |
410 |
நம்ப னித்தலை நாக நன்னகர்ப் |
|
பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ் |
|
செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும் |
|
வேம்ப வூர்ந்துலாம் வேனி லானினே. |
|
(இ - ள்.) இத்தலை நாகம் நல்நகர் - இவ்வுலகில் வானவர் நகர் போலும் அழகிய இராசமா புரத்தே; நம்பன் - சீவகன்; பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும் - புதிய பொன்னாலான முகபடாம் அணிந்த யானையையும்; செம்பொன் நீள் கொடித்தேரும் - நீண்ட கொடியையுடைய பொற்றேரையும்; வாசியும் - குதிரையையும்; வேனிலானின் வெம்ப ஊர்ந்து உலாம் - காமனைப் போல மகளிர் வேட்கையால் வெதும்ப ஊர்ந்து உலாவுவான்.
|
|
(வி - ம்.) நம்பன் - எல்லோரானும் விரும்பப்படுவன்; நம்பு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர். ”நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம் (உரி-31) : நாகம் - பவணலோகம். இஃது இராசமாபுரத்திற்கு உவமை. உருபு தொக்கு நின்றது. ஓடை - முகபடாம். மகளிர் ஆசையால் வெதும்ப என்க. வேனிலான் - காமன்.
|
( 2 ) |
வேறு
|
|
411 |
கலையின தகலமுங் காட்சிக் கின்பமுஞ் |
|
சிலையின தகலமும் வீணைச் செல்வமு |
|
மலையினி னகலிய மார்ப னல்லதிவ் |
|
வுலகினி னிலையென வொருவ னாயினான். |
|
(இ - ள்.) கலையினது அகலமும் - கலையின் பரப்பும்; காட்சிக்கு இன்பமும் - பார்ப்பதற்கு இன்பம் ஊட்டும் அழகும் ; சிலையினது அகலமும் - படைக்கலப் பயிற்சியின் பரப்பும்; வீணைச் செல்வமும் - யாழுடன் பாடும் இசைச் செல்வமும்; மலையினின் அகலிய மார்பன் அல்லது - மலைபோல அகன்ற மார்பனான சீவகனல்லது; இவ்வுலகினின் இலையென - இவ்வுலகில் இல்லையென்று கூற; ஒருவன் ஆயினான் - ஒப்பற்றவன் ஆயினான்.
|
|
(வி - ம்.) இவை சீவகற்குப் பதினையாண்டு சென்ற பின் நல்வினையான் அமைந்த பண்புகள் என்பர் நச்சினார்க்கினியர். கலையினதகலம் - கல்வி காரணமாகப் பிறப்பதொரு ஞானம். காட்சிக்கின்பம் - அப்
|
|