| கோவிந்தையார் இலம்பகம் |
237 |
|
|
பருவத்திலே பிறக்கும் அழகு. சிலையினது அகலம் - படைக்கலப் பயிற்சியால் அப் பருவத்திற் பிறக்கும் வீரம். வீணை - தாளத்துடன் கண்டத்திலும் கருவியினும் பிறக்கும் பாட்டு; இசை நாடகம் காமத்தை விளைத்தலின், அவற்றாற் பிறக்குங் காமத்தை, 'வீணைச் செல்வம்' என்றார். இனி, இவை முறையே நாமகள்; அழகுத் தெய்வம், வீரமகள் மாதங்கி என்னும், இவர்கள் இவனல்லது வேறு யாங்களென்று இல்லையாம்படி ஆயினான் எனினும் ஆம். அரசர்க்கு இந் நான்கும் சிறந்தன.
|
|
|
இச் செய்யுளை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தே (1 - 36) மடவாரென்பதற்குப் ”பூமாதும் கலைமாதும் சயமாதும் புகழ்மாதும் என்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையான் எனினும் அமையும்” என்று பொருள் விரித்து மேற்கோளாகக் காட்டுதலும் உணர்க.
|
( 3 ) |
வேறு
|
|
| 412 |
நாம வென்றிவே னகைகொள் மார்பனைக் |
| |
காம னேயெனக் கன்னி மங்கையர் |
| |
தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங் |
| |
கோம கன்றிறத் துற்ற கூறுவாம். |
|
|
(இ - ள்.) நாமம் வென்றி வேல் நகைகொள் மார்பனை - அச்சந்தரும் வெற்றி வேலையும் முத்துவடத்தையுங் கொண்ட மார்பனான சீவகனை; காமனே என - காமனே யென்றெண்ணி; கன்னி மங்கையர் - கன்னித் தன்மையுடைய பெண்கள்; தாமரைக் கணாற் பருகத் தாழ்ந்து உலாம் - தாமரை மலரனைய கண்களாற் பருகுமாறு தங்கி உலாவும்; கோமகன் திறத்து உற்ற கூறுவாம் - அவ்வரச குமாரனிடத்திலே நிகழ்ந்தவற்றைக் கூறுவோம்.
|
|
|
(வி - ம்.) நாமம் - அச்சம். நகை - முத்துவடம் என்பர் நச்சினார்க்கினியர். கோமகன் - சீவகன். நூலாசிரியர் கூற்று.
|
( 4 ) |
| 413 |
சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலா |
| |
முல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரை |
| |
புல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங் |
| |
கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே. |
|
|
(இ - ள்.) சில் அம் போதின்மேல் திரைந்து தேன் உலாம் முல்லை - சிலவாகிய அழகிய மலர்களின்மேல் சாய்ந்து தேன் கூட்டம் உலாவும் முல்லை; கார் எனப் பூப்ப - கார்காலம் என்று மலர; மொய் நிரை புல்லு கன்று உளிபால் பொழிந்து - மிக்க ஆவின் திரள், தம்மை அணையும் கன்றுகளை நினைத்துப் பாலைப் பொழிதலால்; படும் கல் என் சும்மை - உண்டாகும் கல் என்னும் ஒலி; ஓர் கடலின் மிக்கது - ஒரு கடலொலியினும் மிக்கது.
|
|