கோவிந்தையார் இலம்பகம் |
238 |
|
(வி - ம்.) பின் பனிக்கு அழிதலால் முல்லைக் கொடிகள் சிலவே பூத்தன. ஆனிரைகள் கன்றுகளை நினைத்துத் தாமே பாலைப் பொழிதலாற் கார்காலம் போல முல்லைக் கொடிகள் பூத்தன. பால் பொழியும் ஆநிரையின் ஒலி கடலின் மிக்கது.
|
|
பால்படும் கல்லென் சும்மை என்றது முல்லை காரெனப் பூத்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. உள்ளி - உளி எனக் கெடுதல் விகாரமெய்தி நின்றது. மொய்ந்நிரை : வினைத்தொகை. சும்மை - ஒலி. கல்லென் : ஒலிக்குறிப்பு.
|
( 5 ) |
414 |
மிக்க நாளினான் வேழ மும்மத |
|
முக்க தேனினோ டூறி வார்சுனை |
|
யொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேன் |
|
மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார். |
|
(இ - ள்.) மிக்க நாளினால் - (இங்ஙனம்) ஒளி மிக்க நாளிலே; வேழம் மும் மதம் உக்க தேனினோடு ஊறி - வேழத்தின் மும்மதமும் ஆங்குச் சிந்திய தேனுடன் கலந்து பெருகியதால்; வார்சுனை ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின்மேல் - பெரிய சுனைகள் தம்மில் ஒருமிக்க வாய் நிறைந்து பெருகும் மலையின்மேல்; மடங்கல் மொய்ம்பினார் மக்கள் ஈண்டினார் சிங்கம் போன்ற வலிமையினாராகிய வேடரெல்லோரும் குழுமினர்.
|
|
(வி - ம்.) குன்றின்மேல் மக்கள் என அடையாக்கி வேடர் எனலுமாம். மடங்கள் -அரிமா . மொய்ம்பு - வலிமை.
|
( 6 ) |
415 |
மன்ன வன்னிரை வந்து நண்ணுறு |
|
மின்ன நாளினாற் கோடு நாமெனச் |
|
சொன்ன வாயுளே யொருவன் புட்குரன் |
|
முன்னங் கூறினான் முழுது ணர்வினான். |
|
(இ - ள்.) இன்ன நாளினால் மன்னவன் நிரை வந்து நண்ணுறும் - இந்த இளவேனிலில் வேந்தனுடைய ஆனிரை வந்து சேரும்; நாம் கோடும் எனச் சொன்ன வாயுளே - நாம் அந்நிரையைப் பற்றுவோம் என்றுரைத்த அப்போதே; புட்குரல் முன்னம் - பறவை ஒன்று கூவிய குரலின் குறிப்பை; முழுது உணர்வினான் ஒருவன் கூறினான் - நிமித்தம் எல்லாவற்றினும் அறிவுடையான் ஒருவன் அறிந்துரைத்தான்.
|
|
(வி - ம்.) அது மேற்கூறுகின்றார்.
|
|
இன்ன நாள் என்றது இவ்விளவேனிற்குரிய நாள் என்பதுபட நின்றது. கோடும் : தன்மைப் பன்மை. சொன்னவாயுள் - சொல்லிய அப்பொழுதே. முன்னம் - குறிப்பு. முழுதுணர்வினான் என்றது நிமித்தங்கள் முழுதும் நன்குணர்ந்த முதியவன் என்பதுபட நின்றது.
|
( 7 ) |