| கோவிந்தையார் இலம்பகம் | 
243  | 
  | 
| 
 முத்தொடு மொய் குழல் வேய்ந்த தலைப்படு தண்மலர் மாலை பிணங்க - தம் முலைமீது அணிந்த முத்துமாலையுடன் செறிந்த குழலில் அணிந்த தண்ணிய முல்லை மலரால் ஆன தலைமாலை சிக்குறுமாறு மயிர்குலைய; அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார் - வயிற்றில் மோதிக்கொண்டு அழுதனர் அவ்விடைச்சியர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) வலைப்படு என்பதனை மஞ்ஞையோடுங் கூட்டுக. மஞ்ஞை - மயில். மார்பில் அணிந்த மாலையோடு தலையிலணிந்த மாலை பிணங்கும்படி வயிற்றிலடித்துக்கொண்டு அழுதார் என்னுமிது மிகவும் அழகிது. 
 | 
( 16 ) | 
|  425 | 
எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர் |  
|   | 
நும்மனை மார்களை நோவ வதுக்கி |  
|   | 
வெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத் |  
|   | 
தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) எம் அனைமார்! இனி எங்ஙனம் வாழ்குவிர்? - எம் அன்னையரே! இனி எவ்வாறு வாழ்வீர்கள்?; வெம் முனை வேட்டுவர் நும் அனைமார்களை நோவ அதுக்கி - கொடிய போர் முனையிலே வேடர் நும் அன்னையரை வருந்த அடித்து; உய்த்தனர் ஓ என - கொண்டு போயினார் ஓஓ என்று கதறி ; தம் மனைக்கன்றொடு தாம் புலம்புற்றார் - தம் வீட்டில் இருந்து பசுங்கன்றுகளைத் தழுவி அழத் தொடங்கினர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அன்பினால் அஃறிணையை உயர்திணையாகக் கூறினர். 
 | 
  | 
| 
    எம்மனைமார் நும்மனைமார் என்னும் ஈரிடத்தும் னகரப்புள்ளி கெட்டது. இஃது ஆய்ச்சியர் கன்றுகளை நோக்கிக் கூறியது. இதனால் அவர் அவற்றின்பாற் கொண்டுள்ள அன்பு புலப்படுதல் உணர்க. 
 | 
( 17 ) | 
|  426 | 
பாறை படுதயிர் பாலோடு நெய்பொரு |  
|   | 
தாறு படப்பள்ளி யாகுல மாக |  
|   | 
மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது |  
|   | 
சேறு படமலர் சிந்த விரைந்தே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது ஆறுபட - கல்லைப்போல் தோய்ந்த தயிரும் பாலும் நெய்யும் கலந்து ஆறுண்டாகும்படி; பள்ளி ஆகுலம் ஆக - இடைச் சேரி துன்பப்படும் பொமுது; ஆய்ப்படை மாறுபட மலைந்து நெக்கது - முன்னர்ப் போரிலே கெடாமல் இருந்த ஆயர்படை மாறுபாடுண்டாக வேடருடன் பொருது தானும் கெட்டது; (கெட்ட அப்படை) ; மலர் சேறுபடச் சிந்த விரைந்து - முல்லை மலர்கள் தம்மிடமுள்ள தேனாற் சேறுண்டாகச் சிந்துமாறு வேகமாக, 
 | 
  | 
| 
    (வி - ம்.) இப் பாட்டுக் குளகம். ஆய் : சாதிப் பெயர். 
 | 
( 18 ) |