பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 245 

வேறு

 
429 காசின் மாமணிச் சாமரை கன்னியர்
வீச மாமக ரக்குழை வில்லிட
வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி
யாச னத்திருந் தான்டன் மொய்ம்பினான்.

   (இ - ள்.) காசு இல் மாமணிச் சாமரை கன்னியர் வீச - குற்றம் அற்ற பெருமை மிகும் மணிக்கவரி கொண்டு மகளிர் வீசவும்; மா மகரக் குழைவில் இட - பெரிய மகரமீன் வடிவமான குழை ஒளி வீசவும்; வாசவான் கழுநீர் பிடித்து - மணமிகும் உயர்ந்த கழுநீர் மலரைக் கையிலேந்தி; அடல் மொய்ம்பினான் ஆங்கு அரியாசனத்து இருந்தான் - வென்றிதரும் ஆற்றலுடைய கட்டியங்காரன் அரண்மனையிலே அரியணையிலே வீற்றிருந்தான்.

 

   (வி - ம்.) மொய்ம்பினான் : இகழ்ச்சி. கழுநீர் மலர் பிடித்திருத்தல் அரசர்க்கியல்பு. (சீவக. 1847, 2358).

 

   சச்சந்தன் இருந்த அம்மண்டபத்தே அவனிருந்த அரியணையின் மேல் இருந்தான் என்பதுபட, 'ஆங்கு அரியாசனத்திருந்தான்' என்றார்.

( 21 )
430 கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபு
சண்ட மன்னனைத் தாடொழு தாயிடை
யுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக்
கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான்.

   (இ - ள்.) கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு - எடுத்த வாளொடும் பிரம்பொடும் கையைக் குவித்து; சண்ட மன்னனைத் தாள்தொழுது - கொடிய வேந்தன் அடியை வணங்கி; ஒர்பூசல் உண்டு என்றாற்கு உரையாய் என - அக் காட்டிலே ஒரு குழப்பம் உண்டாயிற்று என்ற வாயில்காவலனை நோக்கி, அதனை உரை என்று வேந்தன் கூற; நிரை கொண்டனர், போற்று எனக் கூறினான் - பசுத்திரளை வேடர் கொண்டனர், திருவுளங் கொள்க என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) கூப்புபு - கூப்பி. சண்டம் - கொடுமை. வாயில்காவலன் என்னும் எழுவாய் வருவித்தோறுக. போற்று - திருவுளம்பற்று.

( 22 )
431 செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக
வெங்க ணோக்கிற்குப் பாய மிலேச்சனைச்
செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையு
ளங்கட் போது பிசைந்தடு கூற்றனான்.