| கோவிந்தையார் இலம்பகம் |
247 |
|
வேறு
|
|
| 433 |
கார்விளை மேக மன்ன |
| |
கவுளழி கடாத்த வேழம் |
| |
போர்விளை யிவுளித் திண்டோ் |
| |
புனைமயிர்ப் புரவி காலாள் |
| |
வார்விளை முரசம் விம்ம |
| |
வானுலாப் போந்த தேபோ |
| |
னீர்டிவிளை சுரிசங் கார்ப்ப |
| |
நிலநெளி பரந்த வன்றே. |
|
|
(இ - ள்.) கார்விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் - கார்காலத்திற் றோன்றாநின்ற முகிலனைய, கவுளிலிருந்து பெருகும் மதமுடைய களிறுகளும்; போர் விளை இவுளித் திண்தேர் - போருக்குத் தகுதியான குதிரை பூட்டிய தேர்களும்; புனைமயிர்ப் புரவி - அணிசெய் மயிருடைய குதிரைகளும்; காலாள் - காலாட்களும் ஆகிய நாற்படையும்; வார்விளை முரசம் விம்ம நீர்விளை சுரிசங்கு ஆர்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசுகள் முழங்கவும், நீரிலிருந்து கிடைத்த சுரிந்த சங்குகள் ஆரவாரிக்கவும் ; வான் உலாப் போந்ததேபோல் - முகில் முழங்கி உலா வருவதுபோல்; நிலம் நெளி பரந்த - நிலம் நெளியுமாறு பரவியெழுந்தன.
|
|
|
(வி - ம்.) யானையும் பரியும் முழக்கமும் உண்மையின் மேகம் உவமை.
|
|
|
இனி, வானுலாய்ப் போந்ததே போலும் நீராவது கடல்; அதில் விளைந்த சங்கு எனலும் ஒன்று. 'நெளிய' என்பது 'நெளி' என வந்தது விகாரம்.
|
( 25 ) |
| 434 |
காலகம் புடைப்ப முந்நீர்க் |
| |
கடல்கிளர்ந் தெழுந்த தேபோல் |
| |
வேலக மிடைந்த தானை |
| |
வெஞ்சின வெயினர் தாக்க |
| |
வால்வளை யலற வாய்விட் |
| |
டிரலையுந் துடியு மார்ப்பப் |
| |
பால்வளைந் திரவு செற்றுப் |
| |
பகலொடு மலைவ தொத்தார். |
|
|
(இ - ள்.) கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததேபோல் - காற்று உள்ளே மோதியதால் முந்நீர்மையுடைய கடல் பொங்கி எழுந்ததைப்போல்; வேல் அகம்
|
|