| நாமகள் இலம்பகம் |
25 |
|
|
வீற்றிருத்தல் - சிறப்புடனிருத்தல். வீறு - சிறப்பு. புலம் - அறிவு. பார் - தடை. கேள்வி - கற்றறிந்த பெரியோர் கூறுவதைக் கேட்டல். 'கற்றலிற் கேட்டலே நன்று' என்பர்.
|
( 1 ) |
| 31 |
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் |
| |
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து |
| |
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் |
| |
ஏமாங் கதமென் றிசையாற்றிசை போய துண்டே. |
|
|
(இ - ள்.) காய்மாண்ட தெங்கின் பழம்வீழ - நன்றாகக் காய்த்த தென்னைநெற்று வீழ ; கமுகின் நெற்றிப்பூ மாண்ட தீந்தேன் தொடை கீறி - கமுகின் உச்சியிற் பொலிவிற் சிறந்த இனிய தேன்போல இனிய நீரையுடைய குலையைக் கீறி; வருக்கை போழ்ந்து - பலாப் பழங்களைப் பிளந்து; தேமாங்கனி சிதறி - தேமாவின் பழங்களைச் சிதறி; வாழைப்பழங்கள் சிந்தும் - வாழைப் பழங்களைச் சிதறும்; ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு - ஏமாங்கதம் என்று பெயர் கூறப்பட்டு இசையாலே திசையெல்லாம் பரவியதாகிய ஒரு நாடு உண்டு.
|
|
|
(வி - ம்.) 'வீழ' என்னும் (வினை) எச்சம் காரணகாரியப் பொருட்கண் இறந்தகாலம் உணர்த்திற்று. 1ஒழிந்த எச்சம் ஈண்டுச் செய்வதன் தொழில்மேலன. பூமாண்ட தீந்தேன் தொடை - பொலிவு மாட்சிமைப் பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு; 'தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்' (மதுரைக் - 40) என்றார் பிறரும். இனித் தேனும் தொடையும் என உம்மை விரித்தலுமாம். வருக்கை : (பொருள்) ஆகுபெயர்.
|
|
|
இனி, வீழ அப்பழம் கீறிப்போழ்ந்து சிதறிச் சிந்தும் எனச் செய்விப்பதன் தொழிலுமாம்; 'விண்டு' (சிற்-24) என்பதுபோல. (விண்டு : ஈங்குத் தன்வினைக்கும் பிறவினைக்கும் பொது).
|
|
|
இஃது உயர்வு நவிற்சி யணி.
|
( 2 ) |
| 32 |
இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற் |
| |
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை |
| |
பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி |
| |
விலங்கல் சோ்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. |
|
|
(இ - ள்.) இலங்கல் ஆழியினான் களிறு ஈட்டம்போல் - விளங்கும் ஆழியையுடைய பரதேசுவரர் என்னும் சக்கரவர்த்தியினுடைய களிற்றுக் கூட்டம்போலே; கணமழை கலங்கு தெண்
|
|
|
|
1. கீறி, போழ்ந்து , சிதறி, சிந்தும் என்னும் தொழில்கள் முறையே தொடை, வருக்கை, மாங்கனி, வாழைப்பழங்கள் என்னும் செய்வதன் தொழில்கள் (தன் வினைகள்) அன்றித் தெங்கின் பழத்தின் வினையாக்கிச் செய்விப்பதன் தொழில் என்றுங் கூறலாம் (இது பிறவினை) .
|
|