| கோவிந்தையார் இலம்பகம் |
250 |
|
|
கடந்து ஓடுவதேபோல அரசனுடைய வேலேந்திய படைகள் முதுகிட்டு ஓடின.
|
|
|
(வி - ம்.) சிற்றணுக்கன்: ஒருவகை விருது; மிகவும் அருகிலே பிடித்தற்குரியது போலும்.
|
( 29 ) |
| 438 |
பல்லினாற் சுகிர்ந்த நாரிற் |
| |
பனிமலர் பயிலப் பெய்த |
| |
முல்லையங் கண்ணி சிந்தக் |
| |
கால்விசை முறுக்கி யாய |
| |
ரொல்லென வொலிப்ப வோடிப் |
| |
படையுடைந் திட்ட தென்ன |
| |
வல்லலுற் றழுங்கி நெஞ்சிற் |
| |
கட்டியங் கார னாழ்ந்தான். |
|
|
(இ - ள்.) பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த முல்லை அம் கண்ணி சிந்த - பல்லாற் கிழித்த நாரிலே தண்ணிய மலர்களை நெருங்க வைத்துக் கட்டப்பட்ட அழகிய முல்லைக் கண்ணிகள் சிதறுமாறு; ஆயர் கால்விசை முறுக்கி ஓடி - இடையர்கள் காலில் விசை உண்டாக விரைந்தோடி; ஒல் என ஒலிப்பப் படை உடைந்திட்டது என்ன - ஒல்லெனும் ஆரவாரத்துடன் நம் படை தோற்றது என்று கூற; கட்டியங்காரன் நெஞ்சின் அல்லல் உற்று அழுங்கி ஆழ்ந்தான் - கட்டியங்காரன் உள்ளத்திலே துன்பமுற்று இரங்கி அந் நினைவிலே ஆழ்ந்தான்.
|
|
|
(வி - ம்.) 'என்றார்க்கு' என்னும் பாடத்திற்கு 'என்று வருந்தினார்க்குத் தானும் எதிரே வருந்தினான்' என்க.
|
|
|
இதனால் ஆயர் தம் பல்லாலே நார்கிழித்துப் பூத்தொடுக்கும்வழக்கமுடையர் ஆதல் காணலாம். பயிலப்பெய்த - செறியவைத்துக் கட்டின.
|
( 30 ) |
| 439 |
வம்புகொண் டிருந்த மாதர் |
| |
வனமுலை மாலைத் தேன்சோர் |
| |
கொம்புகொண் டன்ன நல்லார் |
| |
கொழுங்கயற் றடங்கண் போலு |
| |
மம்புகொண் டரசர் மீண்டா |
| |
ராக்கொண்டு மறவர் போனார் |
| |
செம்புகொண் டன்ன விஞ்சித் |
| |
திருநகர்ச் செல்வ வென்றார். |
|
|
(இ - ள்.) செம்பு கொண்டன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ - செம்பின் தன்மையைக் கொண்டால் ஒத்த மதிலை
|
|