| கோவிந்தையார் இலம்பகம் |
252 |
|
|
காக்கப்பட வேண்டியநிரை 'என்னுங் கருத்துப்பட நந்தகோன் கூறுதற்குரிய கருத்துண்மையாலும் [அரசன் நிரை' யென்றலே பொருந்தும்.]
|
|
|
இரண்டு குலந்தோரும் தாழ்வுயர்வு கருதாதிருத்தற்குக், 'கொள்க' என்றும், 'தருதும்' என்றுங் கூறினான். படை நான்கும் மிகப்படைத்துப் பல்லுயிர்க்கும் அருள்புரிந்தோ ருண்மையானும், கன்னியை விரும்புவாருண்மையானும் கொட்டி அறைவித்தான்.
|
( 32 ) |
| 441 |
வெதிர்ங்குதைச் சாபங் கான்ற |
| |
வெந்நுனைப் பகழி மூழ்க |
| |
வுதிர்ந்தது சேனை யீட்டங் |
| |
கூற்றொடு பொருது கொள்ளுங் |
| |
கருந்தடங் கண்ணி யன்றிக் |
| |
காயமா றாக வேகு |
| |
மரும்பெற லவளு மாகென் |
| |
றாடவர் தொழுது விட்டார். |
|
|
(இ - ள்.) ஆடவர் - அதுகேட்ட அந்நகரத்து மறவர்; வெதிர்ங்குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க - மூங்கிலாலாய குதையையுடைய வில்லுமிழ்ந்த வெவ்விய நுனியையுடைய அம்புகள் மூழ்குதலாலே; சேனையீட்டம் உதிர்ந்தது - நம் வேந்தன் படைத்திரளே சிதறிப் போயிற்று. (இங்ஙனமாகவும்) கூற்றொடு பொருது கொள்ளும் - மறலிபோன்ற இவ்வேடர் படையோடு போர்செய்து கைக்கொள்ளுதற்குரியாள்; கருந்தடங்கண்ணி அன்றி - நந்தகோன் கூறிய கரிய பெரிய விழியுடையாளாகிய அவன் மகளேயன்றி, காயம் ஆறு ஆக ஏகும் அரும்பெறல் அவளும் ஆக - வானமே வழியாக இயங்குவாளொரு தெய்வமகளே ஆக அது செய்து கொள்ளவல்லார் இல்லை என்று ; தொழுது விட்டார் - வணங்கி அவ்வெண்ணத்தைக் கைவிட்டனர்.
|
|
|
(வி - ம்.) வெதிர்-மூங்கில். குதை - வில்லிடத்தோருறுப்பு. கூற்று வேடர் படைக்குவமை. கொள்ளும் என்புழி கொள்ளுதற்குரியாள் என வருவித்தோதுக. காயம் - ஆகாயம். அரும்பெறலவள் என்றது அமரர் மகளை. ஆடவர் - மறவர்.
|
( 33 ) |
| 442 |
கார்விரி மின்ன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந் |
| |
தோ்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித் |
| |
தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற் |
| |
கூர்பரி வுற்ற தெல்லா மொருமகன் உணர்த் தினானே. |
|
|
(இ - ள்.) தேம்தார்ச் சீவகன் கார்விரி மின் அனார்மேல் காமுகர் நெஞ்சின் ஓடும் தேர் பரி கடாவி - தேன் துளிக்கும் மாலை அணிந்த சீவகன் முகிலிடை மலரும் மின்னைப் போன்ற
|
|