பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 253 

மகளிர்மேற் காமுகர் உள்ளம் ஓடுவதுபோல ஓடும்தேரை அதன் செலவிலே செலுத்திப் (பிறகு); தார்பொலி புரவிவட்டம் தான் புகக் காட்டுகின்றாற்கு - தாரினால் விளங்கும் குதிரையை அதன் வட்டத்திலே செல்லுமாறு கற்பிக்கும்போது அவனுக்கு ; அருளின் போகி ஒருமகன் - அவன் அருளாலே போய்ச் செய்தியுணர்ந்து வந்த ஒருவன்; ஊர்பரி வுற்றது எல்லாம் உணர்த்தினான் - ஊர் துன்பப்படுவது முற்றும் தெளிவாகக் கூறினான்.

 

   (வி - ம்.) வட்டம் : குதிரை வட்டமாகச் செல்லும் நெறி. இனி, 'ஒரு மகன் தேர்பரி கடாவிப் போய் வந்து' என்றும் ஆம். பரி -செலவு.*

( 34 )

வேறு

 
443 தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு
மின்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலா
நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பா
ரென்பாரை யோம்பே னெனின்யானவனாக வென்றான்.

   (இ - ள்.) நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை யான் ஓம்பேன் எனின் - நல்லொழுக்கத்தையும் பசுவையும் துறவிகளையும் மகளிரையும் குழவிகளையும் பார்ப்பாரையும் நான் காப்பாற்றேன் எனின்; தன்பால் மனையாள் அயலின் தலைக் கண்டு பின்னும் இன்பால் அடிசிற்கு இவர் கின்ற கைப் பேடிபோலாம் அவன் ஆக என்றான் - தன்பால் தங்கிய வீரமகள் அயலானிடமாகக் கண்டேயும் மேலும் (உயிர்வாழ) இனிய பாற்சோற்றை விழையும் இழிந்த ஒழுக்கமுடைய பேடி போன்றவனாகும் கட்டியங்காரன் ஆவேன் என்று நினைத்தான் சீவகன்.

 

   (வி - ம்.) மனையாள்: இங்கே வீரமகள். நன்பால் - நல்லொழுக்கம். 'பலவயினானும்' (தொல். கிளவி. 51) என்றதனாற் சிலவயின் திணை விரவி எண்ணி உயர்திணையான் முடிந்தன மற்றுப் 'பாற்பசு' எனினும்

 

* இதற்குப் பின்னர் உள்ள இவ்விரு செய்யுட்களும் பயில வழங்கா என்பர் நச்சினார்க்கினியர் :

 

1 என்றவன் உரைப்பக் கேட்டே எரிமணிக் கடகக் கையால்

 

ஒன்றிய தோழர் கைம்மேல் எறிந்துநக் குணர்வின் மிக்கான் சென்றவற் கோகை யாகச் சிறப்பொடு செம்பொன் சிந்தி

 

நன்றிதே போல்வ தில்லை நாந்தொறு மீட்டும் என்றான்.”

 

2 ”சேட்டினம் பருதி போலுந் திருமகிழ் மாலை மார்பன்

 

கேட்டலுங் கனன்று வல்லே கிளரொளி நந்த திண்டேர்

 

நீட்டமில் செய்கை தம்மாற் பண்ணென நினைந்து சொன்னான் தீட்டரும் பரிதி யன்ன சீவக சாமி யன்றே.”