| கோவிந்தையார் இலம்பகம் |
256 |
|
|
துண்டேல் என்றார். உண்டேல் என்றது இல்லை என்பதுபட நின்றது. காட்டுள் என்பது நமக்கே உரிய இக்காட்டுள் என்பதுபட நின்றது. ஏட்டை - இளைப்பு.
|
( 38 ) |
வேறு
|
|
| 447 |
கடற்படை யனுங்க வென்ற |
| |
கானவ ரென்னுங் கூற்றத் |
| |
திடைப்படா தோடிப் போமி |
| |
னுய்யவென் றிரலை வாய்வைத் |
| |
தெடுத்தனர் விளியுஞ் சங்கும் |
| |
வீளையும் பறையுங் கோடுங் |
| |
கடத்திடை முழங்கக் காருங் |
| |
கடலுமொத் தெழுந்த தன்றே. |
|
|
(இ - ள்.) கடல்படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்திடைப் படாது - அரசனுடைய கடலனைய படைகெடும் படி வென்ற வேடர் என்னும் இக் கூற்றுவனிடம் அகப்படாமல்; உய்ய ஓடிப்போமின் என்று - பிழைக்க ஓடிப்போங்கோள் என்று கூறி; இரலை வாய் வைத்து - துத்தரிக் கொம்பை ஊதி; விளியும் வீளையும் எடுத்தனர் - கொக்கரிப்பையும் சீழ்க்கையையும் எழுப்பினர்; கடத்திடை சங்கும் பறையும் கோடும் முழங்க - (அவ்வொலிக்கு எதிரே) காட்டிலே சங்கும் பறையும் கொம்பும் சீவகன் படை முழங்க; காரும் கடலும் ஒத்து எழுந்தது - இரண்டு படையின் ஒலியும் காரையும் கடலையும் ஒத்து எழுந்தன.
|
|
|
(வி - ம்.) படை அனுங்க வென்ற என்றது கூற்றம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. உய்ய ஓடிப் போமின் என மாறுக. இரலை - துத்தரி என்னும் ஒருவகைக் கொம்பு. இது மான் கொம்பாலாயது போலும். விளி - கூக்குரல். வீளை - சீழ்க்கை. ”வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த” என்றார் பிறரும் (குறுந். 272)
|
( 39 ) |
| 448 |
கைவிசை முறுக்கி வீசுங் |
| |
கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச் |
| |
செய்கழற் குருசில் திண்டோ் |
| |
விசையொடு திசைக ளெல்லா |
| |
மையென வளைப்ப வீர |
| |
ரார்த்தன ரவரு மார்த்தார் |
| |
மொய்யமர் நாட்செய் தையன் |
| |
முதல்விளை யாடி னானே. |
|