பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 259 

451 மேனிரைத் தெழுந்த வேடர்
  வெந்நுனை யப்பு மாரி
கோனிரைத் துமிழும் வில்லாற்
  கோமகன் விலக்கி னானே.

   (இ - ள்.) மால்வரை தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை - பெரிய மலையில் நிரைத்துச் சூழ்ந்த கருநிற மழையை; கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததேபோல் - காற்று முழங்கி எழுந்து சிதறுமாறு கல் என்றொலித்துத் தாக்கியது போல; மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம்நுனை அப்பு மாரி - தன்மேல் வரிசையாக எழுந்த வேடரின் கொடிய முனைகளையுடைய அம்பு மழையை; கோல் நிரைத்து உமிழும் வில்லால கோமகன் விலக்கினான் -கணைகளை வரிசையாகச் சொரியும் வில்லினாற் சீவகன் நீக்கினான்.

 

   (வி - ம்.) வரையில் தொடுத்து என்றார் கால மழை யென்றற்கு - காற்றுத் தான் விரும்பிய திசையிலே மழையைப் போக்குமாறு போல இவன் அம்பு தன் விசையால் அவர்களின் அம்பைத் திருப்பியது. நாமுறக், கணைக்காற்று எடுத்த கண்அகன் பாசறை' (புறநா. 373) என்றார் பிறரும். இச்சிறப்பினாற் கோமகன் என்றார்.

( 43 )
452 கானவ ரிரிய வில்வாய்க்
  கடுங்கணை தொடுத்த லோடு
மானிரை பெயர்ந்த வாய
  ரார்த்தன ரணிசெய் திண்டோ
டானொன்று முடங்கிற் றொன்று
  நிமிர்ந்தது சரம்பெய் மாரி
போனின்ற வென்ப மற்றப்
  பொருவரு சிலையி னார்க்கே.

   (இ - ள்.) கானவர் இரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்தலோடும் - வேடர்கள் ஓடுமாறு தன் வில்லிலே கொடிய அம்புகளைத் தொடுத்தவுடன்.; ஆன்நிரை பெயர்ந்த - பசுத்திரள்கள் திரும்பின; ஆயர் ஆர்த்தனர் - இடையர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர்; அணிசெய் திண்தோள் தான் ஒன்று முடங்கிற்று, ஒன்று நிமிர்ந்தது - சீவகனின் அழகிய திண்ணிய தோள்களில் ஒன்று முடங்கியது, ஒன்று நிமிர்ந்தது; அப் பொருவரு சிலையினார்க்கு பெய்மாரிபோற் சரம்நின்ற - (அப்போது) அந்த ஒப்பற்ற வில்லேந்திய வேடர்கட்குப் பெய்யும் மழைபோல அம்புகள் தாரையாய் நின்றன.