பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 26 

திரை மேய்ந்து - கூட்டமாகிய முகில்கள் மறுகும் தௌ்ளிய திரையை உடைய கடலில் (நீரைப்) பருகி; விலங்கல் சேர்ந்து விண்ஏறி - சூல்முதிரும் அளவும் மலையைச் சூழ்ந்திருந்து, பிறகு, வானிலே ஏறி; பொலம்கொள் கொன்றையினான் சடைபோல் மின்னி - பொன்னின் நிறத்தைக் கொண்ட கொன்றை மலர் அணிந்த சிவபிரானின் சடையைப்போல் மின்னி; விட்டு ஆர்த்த - வாய்விட்டு முழங்கின.

 

   (வி - ம்.) கலங்கு தெண்டிரை- மறுகுகின்ற தெண்டிரை; ஆகுபெயர்; (அலையாகிய சினையின் பெயர் கடலுக்கு ஆயினமையின் சினையாகு பெயர்.)

 

   பரதேசுவர சக்கரவர்த்தி ஆதி தீர்த்தங்கரரான விருஷப சுவாமியின் மகனாரென்பர். இவருக்கு எண்பத்து நான்கிலட்சம் யானைகளுண்டென்பர் ; இவர் பன்னிரண்டு மகாசக்கரவர்த்திகளில் முதல்வர் என்றுங் கூறுவர்.

( 3 )
33 தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
மேனி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள்
வானி ரைத்து மணந்து சொரிந்தவே.

   (இ - ள்.) வான்மேல் நிரைத்து - முகில்கள் ஒன்றின்மேல் ஒன்றாக மேலே வரிசையாகத் தம்மிற் கூடி; தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின் - தேன்இறால் நிரைத்து உயர்ந்த மலையின் நெருங்கிய உச்சியில்; வெள்ளி வெண்கோல் விசும்புஉற நிரைத்தன போல் - வெள்ளியாற் செய்த வெள்ளிய கோல்களை வானெங்கும் நிரைத்தாற்போல; கொழுந் தாரைகள் நிரைத்து மணந்து சொரிந்த - வளமான நீர்த்தாரைகளை நிரைத்து மணங் கொண்டு சொரிந்தன.

 

   (வி - ம்.) வான் முகிலை யுணர்த்துவது இடவாகுபெயரால், மணந்து : நீர்த்துளி மண்ணிற் பட்டவுடன் எழும் மணத்தைப் பெற்று. சொரிந்த : பலவின்பால் வினைமுற்று. தேன் இறால் - தேன்கூடு.

( 4 )
34 குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியி
னிழியும் வெள்ளரு வித்திரள் யாவையுங்
குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே.

   (இ - ள்.) மொய்வரைச் சென்னியின் இழியும், முழவின் நின்று அதிர்வெள் அருவித்திரள் யாவையும்- மலையின் நெருங்கிய முடிகளில் நின்று இழியும் முழவென நிலைபெற்று முழங்கும் வெண்மையான அருவிக் கூட்டங்கள் எல்லாமும்; குழவி வெண்