| கோவிந்தையார் இலம்பகம் |
262 |
|
|
வாள் உற்றபுண் கட்டியங்காரன் தன்படை தோற்றமையால் எய்திய துன்பத்திற்குவமை. வடிவேல் எறிந்து இற்றது; சீவகன் வென்றான் என்று கூறக் கேட்டமையால் கட்டியங்காரன் நெஞ்சத்தே ஆழப்பதிந்து கிடந்த துன்பத்திற்குவமை.
|
|
|
நூலாசிரியர் கெடுவான் கேடு நினைப்பான் என்றிரங்குவார் நாளுற்றுலந்தான் என்றொரு பெயர் கூறினர் என்க.
|
( 47 ) |
வேறு
|
|
| 456 |
இரவிதோய் கொடிகொண் மாடத் |
| |
திடுபுகை தவழச் சுண்ணம் |
| |
விரவிப்பூந் தாம நாற்றி |
| |
விரைதெளித் தாரந் தாங்கி |
| |
யரவுயர் கொடியி னான்ற |
| |
னகன்படை யனுங்க வென்ற |
| |
புரவித்தோ்க் காளை யன்ன |
| |
காளையைப் பொலிக என்றார். |
|
|
(இ - ள்.) இரவி தோய் கொடிகொள் மாடத்து - (சீவகன் செல்லுந் தெருவிலே) ஞாயிறு தோயும் கொடிகளைக் கொண்ட மாடத்திலே (உள்ள கற்புடை மகளிர்); இடு புகை சுண்ணம் விரவித் தவழப் பூந்தாமம் நாற்றி - ஊட்டும் நறுமணப் புகையும் சுண்ணப் பொடியுங் கலந்து தவழ, மலர் மாலையைத் தூக்கி; விரை தெளித்து - நறுமணப் பொடிகளை எங்கும் தெளித்து; ஆரம் தாங்கி - முத்துமாலை (மங்கலமாக) அணிந்து; அரவு உயர்கொடியினான் தன் அகன்படை அனுங்க வென்ற - பாம்பெழுதிய கொடியினையுடைய துரியோதனனின் பெரும் படையைக் கெடுமாறு வென்ற; புரவித் தேர்க்காளை அன்ன காளையை - வெள்ளைப் பரி பூட்டிய தேரினை ஊர்ந்து சென்ற அருச்சுனனைப் போன்ற சீவகனை; பொலிக என்றார் - வாழ்க என்று வாழ்த்தினர்.
|
|
|
(வி - ம்.) விராடபுரத்தில் துரியோதனன் கவர்ந்த நிரையை அருச்சுனன் மீட்டது இங்கே குறிக்கப்படுகிறது. அப்போது வில்லுந்தேரும் நிரைமீட்டதும் இங்கே உவமையாயின. மாடங்களை அணி செய்து ஆரந்தாங்கி என்றதனால் மகளிரென்றும் காமக் குறிப்பின்றி வாழ்த்தினமையின் கற்புடை மகளிரென்றும் கொண்டாம். காளை; உவமையாகு பெயர்.
|
( 48 ) |
| 457 |
இன்னமு தனைய செவ்வா |
| |
யிளங்கிளி மழலை யஞ்சொற் |
| |
பொன்னவிர் சுணங்கு பூத்த |
| |
பொங்கிள முலையி னார்தம் |
|