| கோவிந்தையார் இலம்பகம் |
264 |
|
|
அல்குற் பயன் கோடலின். இதனால் கற்புடைய மகளிரல்லாத பிறமகளிரின் வேட்கை புலப்பட்டது கூறினார்.]
|
|
|
காமன் சேனை, என்றது மகளிர் கூட்டத்தினை.
|
( 50 ) |
| 459 |
நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக் |
| |
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிக் |
| |
கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கி |
| |
மேல்வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். |
|
|
(இ - ள்.) நூல்பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கி-நூலும் உவமைக்கொவ்வாத நுண்ணிய இடை ஒடியப் பருத்து; கால் பரந்திருந்த வெங்கண் கதிர்முலை கச்சின் வீக்கி - அடி பரந்திருந்த விருப்பமூட்டும் கரிய கண்களையுடைய ஒளிவிடும் முலைகளைக் கச்சினால் இறுக்கி; கோல் பொரச் சிவந்த கோல மணி விரல் கோதை தாங்கி - யாழ் நரம்பு தாக்கியதாற் சிவந்த அழகிய விரலாற் கூந்தலைத் தாங்கி; மேல்வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார் - சீவகன் வரவை எதிர்நோக்கிய மகளிர் வான மங்கையரைப் போன்றனர்.
|
|
|
(வி - ம்.) நுசுப்பின் : இன்ஐ :அசைச் சொற்கள்.
|
( 51 ) |
| 460 |
ஆகமு மிடையு மஃக |
| |
வடிபரந் தெழுந்து வீங்கிப் |
| |
போகமும் பொருளு மீன்ற |
| |
புணர்முலைத் தடங்க டோன்றப் |
| |
பாகமே மறைய நின்ற |
| |
படைமலர்த் தடங்க ணல்லார் |
| |
நாகம்விட் டெழுந்து போந்த |
| |
நாகர்தம் மகளி ரொத்தார். |
|
|
(இ - ள்.) ஆகமும் இடையும் அஃக அடிபரந்து எழுந்து வீங்கி- உடலும் இடையும் சுருங்குமாறு அடிபரந்து வளர்ந்து பருத்து; போகமும் பொருளும் ஈன்ற புணர்முலைத் தடங்கள் தோன்ற - இன்பத்தையும் தேமலாகிய பொருளையும் நல்கிய இணைமுலைகள் தெரிய; பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங்கண் நல்லார் - மெய்யின் அடிப்பாகம் மறைய நின்ற, காமன் படையாகிய மலரனைய பெருங்கண் மங்கையர்; நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார் - நாகலோகமாகிய பவணத்தை விட்டு வெளியே வந்த நாகமங்கையரைப் போன்றார்.
|
|
|
(வி - ம்.) புணர் முலை : நெருங்கின முலை என்றுமாம். படை : வேற்படையும் ஆம். ['முலைத்தடம் ஒருபாதியே தோன்ற ஒரு பாதி
|
|