| கோவிந்தையார் இலம்பகம் |
266 |
|
|
(இ - ள்.) வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து - போர்வை முதலானவற்றின் ஒளி நிலவின் ஒளியும் ஞாயிற்றின் ஒளியும் போலத் தம்மிற் கலக்குமாறு; மூதூர் இடவகை எல்லையெல்லாம் மின் நிரைத்திட்டதேபோல் - அப் பழம்பதியின் பல பகுதிகளிளெல்லாம் மின்னை ஒழுங்குற அமைத்தாற்போல; மாடம் எல்லாம் படஅரவு அல்குலாரைப் பயந்தன - வீடுகளெல்லாம் அரவின்பட மனைய அல்குலையுடைய மகளிரை யீன்றன.
|
|
|
(வி - ம்.) வடகத்திற்கு அத்தவாளம் என்றும் பெயர். கலந்து - கலப்ப : வினையெச்சத் திரிபு. வகை - குறுந்தெரு. இனி, வடக முதலியன ஒளி தம்மிற் கலக்கும்படி சில மின் நிரைத்தாற்போல என்றுமாம்.
|
( 54 ) |
| 463 |
மாதுகு மயிலி னல்லார் |
| |
மங்கல மரபு கூறிப் |
| |
போதக நம்பி யென்பார் |
| |
பூமியும் புணர்க வென்பார் |
| |
தோதக மாக வெங்குஞ் |
| |
சுண்ணமேற் சொரிந்து தண்ணென் |
| |
றாதுகு பிணையல் வீசிச் |
| |
சாந்துகொண் டெறிந்து நிற்பார். |
|
|
(இ - ள்.) மாது உகும் மயிலின் நல்லார் - காதல் ஒழுகும் மயிலனைய பரத்தையர்; மங்கலம் மரபு கூறி - முறைப்படி வாழ்த்துக் கூறி;! நம்பி ! போதக! என்பார் - நம்பியே! வருக! என்பார்; பூமியும் புணர்க என்பார் - நிலமகளும் கூடுக! என்பார் ; தாதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து - வருந்துமாறு எங்கும் சுண்ணப் பொடியை அவன்மேற் சிதறி ; தண் என்தாது உகுபிணையல் வீசி - குளிர்ந்த மகரந்தம் சிந்து மாலைகளை எறிந்து; சாந்து கொண்டு எறிந்து நிற்பார் - சந்தனத்தைக் கையிலெடுத்து வீசி நிற்பார்.
|
|
|
(வி - ம்.) மாதுகு நல்லார் எனவே பரத்தையராயினர். போதக - போதுக; 'திருவே புகுதக' (சீவக - 2121) என்றாற் போல. இவன் அரசனென்றறியாதிருந்தும் உலகங்காத்தற்குரியானெனக் கொண்டு' பூமியும் புணர்க' என்றனர். இது முதல் 'வட்டுடை' (468) அளவும் ஒரு தொடர்.
|
( 55 ) |
| 464 |
கொடையுளு மொருவன் கொல்லுங் |
| |
கூற்றினுங் கொடிய வாட்போர்ப் |
| |
படையுளு மொருவ னென்று |
| |
பயங்கெழு பனுவ ணுண்ணூ |
|