பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 269 

   (இ - ள்.) மண் அகத்து இவர்கள் மழகளிறு அனைய தோன்றல் ஒவ்வார் - நிலவுலகத்துள்ள இவர்கள் இளங்களிறு போன்ற இத் தோன்றலுக்கு ஒப்பாகார்; மற்று இவ்வென்றி வேல் குருசில் ஒப்பார் விண் அகத்து உளர்கொல்? - இனி இவ்வெற்றி வேலேந்திய குருசிலை ஒப்பார் வானுலகத்தே உள்ளனரோ? அறியேம்; பண் அகத்து உறையும் சொல்லார் நல்நலம் பருகவேண்டி - பண்ணில் அமைந்த இனிய மொழி மங்கையர் நல்ல அழகை நுகர விரும்பி; அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ? அளியர் என்பார் - இப் பெருந்தகையைத் தவத்தினாலே பெற்றவர் யாவரோ? அவர் அளிக்கத் தக்கார் என்பார் (சிலர்).

 

   (வி - ம்.) உலகிலுள்ள இளைஞர் தம் மனத்திற்கு அணியராதலால் இவர் என்று சுட்டினார். யார் கொலோ என்றது மக்களோ தேவரோ என்றையுற்றவாறு.

( 59 )
468 வட்டுடைப் பொலிந்த தானை
  வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டுடை சூழ்ந்த காசு
  பஞ்சிமெல் லடியைச் சூழ
அட்டரக் கனைய செவ்வா
  யணிநலங் கருகிக் காமக்
கட்டழ லெறிப்ப நின்றார்
  கைவளை கழல நின்றார்.

   (இ - ள்.) வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே - வட்டுடையோடு அழகுற்றுக் காணப்படும், உடையணிந்த வள்ளலாகிய சீவகனைக் கண்டபொழுதே; அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணிநலம் கருகி - காய்ச்சிய செவ்வரக்கனைய சிவந்த வாயின் அழகிய நலம் கருகி; பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ - பட்டாடையிலே சூழ அணிந்த மேகலை பஞ்சி அனைய மெல்லிய அடியைச் சூழவும்; கைவளை கழல நின்றார் - கைவளைகள் கழலவும் (மெய்யிளைத்து) நின்றனர்.

 

   (வி - ம்.) வட்டுடை : முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை. அட்ட அரக்கு: அகரம் தொக்கது.

( 60 )
469 வார்செலச் செல்ல விம்மு
  வனமுலை மகளிர் நோக்கி
யோ்செலச் செல்ல வேத்தித்
  தொழுதுதோ டூக்க விப்பாற்