பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 270 

469 பார்செலச் செல்லச் சிந்திப்
  பைந்தொடி சொரிந்த நம்பன்
றோ்செலச் செல்லும் வீதி
  பீர்செலச் செல்லு மன்றே.

   (இ - ள்.) வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி - கச்சு மேலே போகப்போக விம்முகின்ற அழகிய முலைகளையுடைய பெண்கள் சீவகளை நோக்கி; ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது இப்பால் தோள் தூக்க - (தங்கள்) அழகு மெலிய மெலியக் கும்பிட்டு அவன் சென்ற பிறகு தோள்களைத் தொங்கவிட; செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி பாசொரிந்த - சிறிதாக நழுவிப் பசிய தொடிகள் நிலத்திலே வீழ்ந்தன; நம்பன்தேர் செலச செல்லும் வீதி பீர்செலச் செல்லும் - (இங்ஙனம்) நம்பனுடைய தேர் சென்றுகொண்டிருக்கும் தெருக்கள் தோறும் மகளிர்க்கு மெய்யிலே பசப்புப் பரவிப் பரவிச் செல்லும்.

 

   (வி - ம்.) செல்லும் என்பது நிகழ்காலம் உணர்த்தியது. தொடி - மகளிர் தோளில் அணிவது; பலவாதலிற் 'சொரிந்த' என்றார்.

 

   'நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து, தோட்பழி மறைக்கு முதவிப், போக்கில் பொலந்தொடி ' (நற். 136) என்பர். முன் வளை கழல நின்றார்க்கு வருத்த மிகுதியால், தொடியும் கழன்றன.

 

   தோள் தூக்க -தோளைத் தூங்கவிட, பீர் -பசப்பு :ஆகுபெயர்.

( 61 )
470 வாண்முகத் தலர்ந்த போலு
  மழைமலர்த் தடங்கண் கோட்டித்
தோண்முதற் பசலை தீரத்
  தோன்றலைப் பருகு வார்போ
னாண்முதற் பாசந் தட்ப
  நடுங்கினார் நிற்ப நில்லான்
கோண்முகப் புலியோ டொப்பான்
  கொழுநிதிப் புரிசை புக்கான்.

   (இ - ள்.) வாள்முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த்தடம்கண் கோட்டி - ஒளியுற்ற முகத்திலே மலர்ந்த மலர் போன்ற குளிர்ந்த பெரிய கண்களை வளைத்து; தோள முதல் பசலை தீர - தோளிலே அமைந்த பசப்பு நீங்குமாறு; தோன்றலைப் பருகு வார்போல் - சீவகனைப் பருகுகின்றவர்கள் போல (நோக்கி); நாண் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப - நாணாகிய முதல் தளை தடுக்க நடுங்கி நிற்கும்போது; நில்லான் - தான் நில்லாதவனாய்; கோள்முகப் புலியோடு ஒப்பான் - கொல்லும் முகத்தை