பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 272 

கூடி; அட்ட மங்கலமும் ஏந்தி - எட்டு மங்கலப் பொருளையும் ஏந்தி; இட்ட உத்தரியம் மெல்என்ற இடைசுவல் வருத்த ஒல்கி - அணிந்த மேலாடை மெல் என்ற இடையையும் பிடரையும் அலைக்கச் சென்று; பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்ப - பட்டமும் குழையும் ஒளிரப் பல்வகை அணிகளும் ஒலிசெய; மைந்தனைக் கொண்டு சூழ்ந்து புக்கார் - சீவகனை எதிர் கொண்டு சூழ்ந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

   (வி - ம்.) 'சாமரை தீபம் தமனியப் பொற்குடம்

 
  காமர் கயலின் இணைமுதலாத்-தேமருவு  
  கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம்  
  எண்ணிய மங்கலங்கள் எட்டு.'  

   [தமனியப் பொற்குடம் - பொன்னாலாகிய அழகிய குடம். காமர் - அழகிய. கயலின் இணை - இரட்டைக் கயல்மீன். தோட்டி - அங்குசம். கதலிகை - கொடி.]

( 64 )
473 தாயுயர் மிக்க தந்தை
  வந்தெதிர் கொண்டு புக்குக்
காய்கதிர் மணிசெய் வெள்வேற்
  காளையைக் காவ லோம்பி
யாய்கதி ருமிழும் பைம்பூ
  ணாயிரச் செங்க ணான்றன்
சேயுய ருலக மெய்தி
  தோன்றன்மற் றின்ன கூறும்.

   (இ - ள்.) தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு - தாயும் உயர்வு மிகுந்த தந்தையும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்று; காய் கதிர்மணி செய்வெள்வேல் காளையைக் காவல் ஓம்பி - ஒளிவீசும் மணிகள் அணிந்த வேலேந்திய சீவகனை ஆலத்தி முதலியவற்றாற் கண் எச்சில் போக்கி; ஆய்கதிர் உமிழும் பைம்பூண் ஆயிரச் செங்கணான் தன்சேய் உயர் உலகம் - ஆய்ந்த ஒளி வீசும் புத்தணி புனைந்த ஆயிரஞ் சிவந்த கண்ணுடைய இந்திரனது மிகவுயர்ந்த வானுலகை; எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார் - அடைந்தாற் போன்ற ஒரு செல்வத்தைத் தாம் அடைந்தவரானார்.

 

   (வி - ம்.) 'உயர்மிக்க தந்தை' ; என்பதற்கு 'மகனுயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை'; 'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே' புறநா. 312 என்றார் பிறரும் - என்று பொருளும் சான்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

 

   'காளையை எதிர்கொண்டு ' எனக் கூட்டுக.

( 65 )