பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 274 

   (வி - ம்.) பொறிமுதல் - இருவினையும் செய்தற்குக் காரணமான உயிர். 'தொழின் முதனிலையே' (தொல். வேற்றுமை மயங்கி. 29) என்றாற் போல. நாட்டையும் அமைச்சர் அறிவுரையையும் நோக்காததனால், 'கேள்முதற் கேடுசூழ்ந்த நாட்டிறை' என்றார். 'கேள் முதல்' என்பதற்கு 'முதலில் இதனைக் கேள்' என்று பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர்.

( 67 )
476 கோலிழுக் குற்ற ஞான்றே
  கொடுமுடி வரையொன் றேறிக்
காலிழுக் குற்று வீழ்ந்தே
  கருந்தலை களைய லுற்றேன்
மால்வழி உளதன் றாயின்
  வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம்வித் தனைய தெண்ணி
  அழிவினுள் அகன்று நின்றேன்.

   (இ - ள்.) கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடுமுடிவரை ஒன்று ஏறி - அரசன் இறந்த அன்றே நீண்ட முடியை யுடைய மலை ஒன்றில் ஏறி; கால் இழுக்குற்று வீழ்ந்தே கருந்தலை களையல் உற்றேன் - கால்தவறி வீழ்ந்தவன்போல் வீழ்ந்து தலையுடைந்து இறக்க முயன்றேன்; மால் வழி உளதன்றாயின் வாழ்வினை முடிப்பல் என்றே - அரசன் கால்முளை இல்லை யென்றறிந்த பிறகே வாழ்வை முடிப்பேன் என்றே; ஆலம் வித்து அனையது எண்ணி - ஆலம் விதை போன்ற பயனுடைய நினைவு கொண்டு; அழிவினுள் அகன்று நின்றேன் - இறப்பினை நீங்கி நின்றேன்.

 

   (வி - ம்.) [நச்சினார்க்கினியர், 'அரசன் வழி ஆலம்வித்துப் போலத் தெறித்துப்போய் மறைந்தது பின் தோன்றினதில்லையாயின் உயிரைப் போக்குவல் என்றே எண்ணி, வருத்தத்தே மிக்கு நின்றேன்' என்று மொழி மாற்றிப் பொருள் கூறுவர்.]

 

   'கால் இழுக்குற்று வீழ்ந்து' என்றது, கட்டியங்காரன், 'இவன் அரசனோடு இறந்தான்' என்று நட்புரிமையறிந்து தன் சுற்றத்தை யழிப்பான் என்று கருதி.

 

   அரசிக்கு மகவுண்மை யறிதலின் இங்ஙனங் கூறினான். இதனையே, 'கேட்டு மறக்க' என்றான்.

 

   நன்றல்லது அன்றே மறப்பது நன்றாயினும் நினக்கிதனைக் கூறுதல் நன்றென்று கூறுகின்றேன் என்பான் கேட்டிது மறக்க என்றான்.

( 68 )
477 குலத்தொடு முடிந்த கோன்றன்
  குடிவழி வாரா நின்றே
னலத்தகு தொறுவி னுள்ளே
  னாமங்கோ விந்த னென்பே.