பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 275 

477 னிலக்கண மமைந்த கோதா
  வரியென விசையிற் போந்த
நலத்தகு மனைவி பெற்ற
  நங்கைகோ விந்தை யென்பாள்.

   (இ - ள்.) குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாராநின்றேன் - குலத்தொடு மடிந்த அரசனுடைய குடிகளின் வழியிலே வருவேன் யான்; நலம்தகு தொறுவின் உள்ளேன் - நன்மையுற்ற ஆனிரை யுடையேன்; நாமம் கோவிந்தன் என்பேன். கோவிந்தன் என்று பெயர் கூறப்படுவேன்; இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையின் போந்த - மகளிரிலக்கணம் பொருந்திய கோதாவரி என்று புகழப் பெற்ற ; நலம்தகும் மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள் - நன்மையுடையாள் என் மனைவி யீனற மங்கை கோவிந்தை எனப்படுவாள்.

 

   (வி - ம்.) குலம் தோன்றுதல் அருமை பற்றிப் பின்னும், 'முடிந்த' என்றான். தன்குல மெல்லாம் இப்போது தானே என்பது தோன்ற, 'வாராநின்றேன்' என்றான்.

 

   இலக்கணம் - குலமகளிர்க்குரிய இலக்கணம். கோதாவரி என்பது நந்தகோன் மனைவியின் பெயர். 'தாயைப்போலே பிள்ளை' என்னும் பழமொழி பற்றிக் கோவிந்தையின் சிறப்புக் கூறுவான் தாய்மேலேற்றிக் கூறினன் என்க.

( 69 )
478 வம்புடை முலையி னாளென்
  மடமகள் மதர்வை நோக்க
மம்படி யிருத்தி நெஞ்சத்
  தழுத்தியிட் டனைய தொப்பக்
கொம்படு நுசுப்பி னாளைக்
  குறையிரந் துழந்து நின்ற
நம்படை தம்மு ளெல்லா
  நகைமுக மழிந்து நின்றேன்.

   (இ - ள்.) வம்பு உடை முலையினாள் என் மடமகள் மதர்வை நோக்கம் - கச்சிறுக்கிய முலையுடையாளாகிய என் மடமகளின் மயக்கத்தை ஊட்டும் நோகக்ம்; அம்பு அடி யிருத்தி நெஞ்சத்து அழுத்தியிட்ட அனையது ஒப்ப - அம்பினைத் தோளடியிலே செல்ல ஊன்றி நெஞ்சத்து அழுத்தியிட்டாற் போன்றதாலே; கொம்பு அடு நுசுப்பினாளை - மலர்க் கொம்பை வென்ற இடையினாளை; குறை இரந்து உழன்று நின்ற - பெறவேண்டி வருந்தி நின்ற; நம் படை தம்முள் எல்லாம் நகைமுகம் அழிந்து நின்