பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 276 

றேன - நம் ஆயர்குழுவி லெல்லாம் முகச் செவ்வி காட்டாது மறுத்து நின்றேன்.

 

   (வி - ம்.) தான் மகட்கொடை விரும்புதலின் நம்படையென்றான். சீவகன் விரும்பிக் கொள்வதற்கு மகளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினான்.

 

   நம்படை என்றது ஆயர்களை. நகைமுகம் என்றது உடம்பாடறிவிக்கும் முகத்தை. எனவே முகங்கொடாதிருந்தேன் என்பதாயிற்று.

( 70 )
479 பாடகஞ் சுமந்த செம்பொற் சீறடிப் பரவை யல்குற்
சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளை
யாடகச் செம்பொற் பாவை யேழுடன் தருவ லைய
வாடலில் வதுவை கூடி மணமக னாக என்றான்.

   (இ - ள்.) ஐய! - ஐயனே !; பாடகம் சுமந்த செம்பொன் சீறடி - பாடகம் அணிந்த செம்பொன் அனைய சிற்றடியையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும்; சூடகம் அணிந்த முன்கை - வளையல் அணிந்த முன் கையினையும்; சுடர்மணிப் பூணிளாளை - ஒளிவிடும் மணியணியுடைய கோவிந்தையை; ஆடகம் செம்பொன் பாவை ஏழுடன் தருவல் - ஆடகப் பொன்னாலாய பதுமைகள் ஏழுடன் தருவேன் ; வாடல் இல் வதுவை கூடி மணமகன் ஆக என்றான் - குறைவற்ற திருமணம் புரிந்துகொண்டு மணமகன் ஆவாயாக என்று வேண்டினான்.

 

   (வி - ம்.) இது கேட்பினும் மறக்கத் தகாத மொழி. 'கேள் முதல்' என்பதற்கு 'முதலிற் கேள்' என்று 'கேட்டிது மறக்க '(675) என்னுஞ் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர் முன்னர்க் கூறப்பட்டதற்குத் தொடர்பு காட்டுகிறார் இங்கே.

( 71 )

வேறு

 
480 வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போறீஞ்சொல்ல
ளுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மடநோக்கி
கண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய்.

   (இ - ள்.) வண்ணம் வனமுலை மாதர் மடநோக்கி - நிறமும் அழகும் உடைய முலையினையுடைய காதலை யூட்டும் மட நோக்கினாள்; வெண்ணெய் போன்று ஊறு இனியள் - வெண்ணெயைப் போலக் குழைந்து தொடுதற்கு இனியவள்; மேம்பால் போல் தீஞ்சொல்லள் - விரும்பும் பால் போல இனிய மொழி