பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 277 

யாள்; உண்ண உருக்கிய ஆன் நெய்போல் மேனியள் - வற்ற உருக்கிய பசுவின் நெய்போன்ற மேனியாள்; கண்ணும் கருவிளம்போது இரண்டே கண்டாய் - கண்களும் இரண்டு கருவிள மலர்களே யென அறிவாய்.

 

   (வி - ம்.) மேம்பால் : மேவும் பால் : 'மேவும்' என்பதற் ஈற்றயல் நின்ற உகரம் தான் நின்ற மெய்யொடுங் கெட்டது. உண்ண - வற்ற. கண்ணும் : உம் : உயர்வு சிறப்பும்மை. இடையர்க்குற்ற பொருள்களே ஈண்டுவமையாயின நயங்காண்க.

( 72 )
481 சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும்
பாதால மெல்லாம் நிறைத்திடுவல் பைந்தாரோய்
போதார் புனைகோதை சூட்டுன் னடிச்சியை
யாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான்.

   (இ - ள்.) பைந்தாரோய்! - புதிய மாலையுடையாய்!; சேதா நறு நெய்யும் தீம் பால் சுமைத் தயிரும் - செம்மைநிறப் பசுவின் நன்மண முறு நெய்யும் இனியபாலும் ஆடைத் தயிரும்; பாதாலம் எல்லாம் நிறைத்திடுவல் - பாதாலவுலகினும் நிறையச் செய்வேன் ; ஆவது யாது எல்லாம் அறிந்தருளி - உன் அடிச்சியைப் போது ஆர் புனை கோதை சூட்டு என்றான்- உன் அடித்தொண்டுக்குரிய கோவிந்தையை மலராற் புனைந்த மலர்மாலையால் அணிவாயாக என்றான்.

 

   (வி - ம்.) செம்மை +ஆ= சேதா. 'யாது ஆவது? - யாது கெடுதியாம்? ' என்றும் கூறலாம்.

 

   சேதா - சிவப்புப் பசு. பசுக்களிற் சிவப்புப் பசு சிறந்ததென்பது பற்றிச் சேதா என்றான். சுமைத் தயிர் - ஆடையையுடைய தயிர். மிகுதியாக நிறைப்பேன் என்பான் பாதாலமெல்லாம் நிறைந்திடுவல் என்றான்.

( 73 )
482 குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி
நலநுகர்ந்தா னன்றே நறுந்தார் முருக
னிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை
யிலவலர்வா யின்னமிர்த மெய்தினா னன்றே.

   (இ - ள்.) நம்பி ! - நம்பியே !; கொழும் கயல்கண் வள்ளி நலம் நறுந்தார் முருகன் நுகர்ந்தான் அன்றே - கொழுவிய கயல் போன்ற கண்களையுடைய வள்ளியின் நலத்தை நறுமணமாலை அணிந்த முருகன் துய்த்தான் அன்றே? நிலமகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை - நிலமகளின் கணவனான திருமாலும் மிகுதியான ஆனிரையை யுடைய நப்பி்ன்னையின்; இலவு அலர்