| கோவிந்தையார் இலம்பகம் |
279 |
|
|
(இ - ள்.) குலத்தின் மிக்கார் கன்னியர் கதிர்முலைக் கன்னி மார்பம் - தம் குலத்திற் சிறந்தவராகிய கன்னியரின் கதிர்த்த முலைகளையுடைய அழியாத மார்பினை; முன்னினர் முயங்கின் அல்லான் - ஆராய்ந்து தழுவின் அல்லாமல்; முறிமிடை படலை மாலைப் பொன்னிழை மகளிர் ஒவ்வாதவரை - தளிரும் மலருமாகத் தொடுத்த வகை மாலையினையும் பொன்னணியையும் அணிந்த மகளிரில் தம் குலத்திற்கு ஒவ்வாதவரை; முன் புணர்தல் செல்லார் - முதலிலே கூடுதலைக் கொள்ளார்; மாந்தர்க்கு முறைமை இன்னது என மனத்து எண்ணினான் - மக்களுக்குரிய ஒழுங்கு இத்தகையது என்று உள்ளத்திலே (சீவகன்) எண்ணினான்.
|
|
|
(வி - ம்.) மக்கட்கு என்றதனால் வானவர்க்குக் குலவேற்றுமையின்றென்று கருதினான் ஆயிற்று. மனத்து எண்ணினான் என்றதனால் தன் தோழன் பதுமுகனுக்குக் கொடுக்க எண்ணினான் என்றுங் கொள்க.
|
|
|
இச் செய்யுளால் தேவர் காலத்தே தான் தமிழ்நாட்டில் சாதி வேற்றுமை பாராட்டும் வழக்கம் வேரூன்றித் தழைத்ததுபோலும் என்று ஊகிக்க இடன் உண்டு.
|
( 75 ) |
| 484 |
கோட்டிளங் களிறு போல்வா |
| |
னந்தகோன் முகத்தை நோக்கி |
| |
மோட்டிள முலையி னாணின் |
| |
மடமக ளெனக்கு மாமான் |
| |
சூட்டொடு கண்ணி யன்றே |
| |
யென்செய்வா னிவைகள் சொல்லி |
| |
நீட்டித்தல் குணமோ வென்று |
| |
நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். |
|
|
(இ - ள்.) கோடு இளங்களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி - கோட்டினையுடைய இளங்களிறு போன்ற சீவகன்? நந்தகோனுடைய முகத்தைப் பார்த்து; மாமான்! - மாமா!; மோடு இளமுலையினாள் நின் மடமகள் - பெரிய இளமைச் செவ்வியையுடைய நின் மகள் ; எனக்குச் சூட்டொடு கண்ணி அன்றே? - எனக்கு நெற்றிச் சூட்டுங் கண்ணியும் ஆவாள்; இவைகள் சொல்லி என் செய்வான்? - (ஆகையால்) இவைகளைச் சொல்லி என்ன செய்வது? , நீட்டித்தல் குணமோ? - இவ்வாறு வீண்காலம் போக்குதல் பண்புடைமையோ?; என்று நெஞ்சகம் குளிர்ப்பச் சொன்னான் - என்று உள்ளங்குளிர இன்மொழிகளையுங் கூட்டிக் கூறினான்
|
|