பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 28 

36 வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை
உள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய்
வெள்ள நாடு மடுத்து விரைந்ததே.

   (இ - ள்.) வள்ளல் கைத்தல மாந்தரின் - வண்மையையுடைய கையினைத் தம்மிடத்தே உடைய நன்மக்களைப்போல; மால்வரைக் கொள்ளைகொண்ட கொழுநிதிக் குப்பையை - பெரியமலையிலிருந்து வாரிக்கொண்டு வந்த வளமிகு செல்வத்திரளை; ஊர்தொறும் உள்ளம் இல்லவர்க்கு - ஊர்தொறும் சோம்பியிருப்போர்க்கு; மடுத்து உய்த்து நாடுஉராய் வெள்ளம் விரைந்த - கொண்டு கொடுப்பதாக நாட்டிலே தோன்றி விரைந்து சென்றது.

 

   (வி - ம்.) உய்த்து - உய்ப்ப. உராய் - பெயர்ந்து. (உள்ளம் - ஊக்கம் . மாந்தரின்: இன் : ஐந்தனுருபு ; ஒப்புப் பொருள்.)

( 7 )
37 மையல் யானையின் மும்மத மார்ந்துதே
னைய பொன்னசும் பாடி யளைந்துராய்ச்
செய்ய சந்தனந் தீம்பழ மாதியா
நைய வாரி நடந்தது நன்றரோ.

   (இ - ள்.) மையல் யானையின் மும்மதம் ஆர்ந்து - மயங்கிய யானையின் மும்மதத்தையும் உள்ளே நிறைத்து; தேன் ஆடி ஐயபொன் அசும்பு அளைந்து உராய் - தேனைப் பூசி வியப்பையுடைய பொன் துளியைக் கலந்து பெயர்ந்து, செய்ய சந்தனம் தீம்பழம் ஆதியா - நல்ல சந்தனம் இனிய பழம் என்பவை முதலாகப் பிறவற்றையும்; நைய வாரி நன்று நடந்தது - காடு வருந்துமாறு வாரிக்கொண்டு பெரிதாக வெள்ளம் நடந்தது.

 

   (வி - ம்.) உண்டு பூசி அளைந்து செருக்கி நாட்டை நோக்கி நடந்ததென்றார். குறிப்பு (மக்கள் செய்கையை வெள்ளத்தின் செயலாக்கினமையின் குறிப்பு) ஐய : உரிச்சொல் ஈறு திரிந்தது ('ஐ' என்னும் உரிச்சொல் 'ஐய' எனத் திரிந்தது. 'ஐ வியப்பாகும்' தொல் - உரி. 87) 'நன்று பெரிதாகும்' (தொல் - உரி - 45). (அரோ : அசை)

( 8 )
38 வீடில் பட்டினம் வெளவிய வேந்தெனக்
காடு கையரிக் கொண்டு கவர்ந்துபோய்
மோடு கொள்புனன் மூரி நெடுங்கட
னாடு முற்றிய தோவென நண்ணிற்றே.

   (இ - ள்.) வீடு இல் பட்டினம் வெளவிய வேந்து என-குடி நீங்குதல் இல்லாத பட்டினத்தைக் கொள்ளைகொண்ட அரசனைப்