கோவிந்தையார் இலம்பகம் |
281 |
|
486 |
கனிவளர் கிளவி காமர் |
|
சிறுநுதல் புருவங் காமன் |
|
குனிவளர் சிலையைக் கொன்ற |
|
குவளைக்கண் கயலைக் கொன்ற |
|
வினியுள ரல்ல ராய |
|
ரெனச்சிலம் பரற்றத் தந்து |
|
பனிவளர் கோதை மாதர் |
|
பாவையைப் பரவி வைத்தார். |
|
(இ - ள்.) பனிவளர் கோதை மாதர் - குளிர்ச்சி வளரும் மாலையணிந்த மடவார்; கனி வளர் கிளவி - கனிபோன்ற இனிய மொழியாளின்; காமர் சிறு நுதல் புருவம் காமன் குனிவளர் சிலையைக் கொன்ற - அழகிய சிறிய நெற்றியும் புருவமும் காமனுடைய வளைதலில் வளர்ந்த வில்லைக் கொன்றன; குவளைக்கண் கயலைக் கொன்ற - குவளை மலர் போன்ற கண்கள் கயல்மீனைக் கொன்றன; இனி ஆயர் உளர் அல்லர் - (ஆகையால்) இனி ஆயர்கள் இவளைக் கண்டால் உயிருடன் இரார்; எனச் சிலம்பு அரற்ற - என்று சிலம்புகள் வாய்விட்டுப் புலம்ப; பாவையைத் தந்து பரவி வைத்தார் - பாவை போன்ற அவளை அழைத்து வந்து வாழ்த்தி (அப்பந்தரிலே) அமர்த்தினர்.
|
|
(வி - ம்.) 'குனிவு' என்பது 'குனி' என விகாரப்பட்டது.
|
( 78 ) |
487 |
நாழியு ளிழுது நாகான் |
|
கன்றுதின் றொழித்த புல்தோய்த் |
|
தூழிதோ றாவுந் தோழும் |
|
போன்றுடன் மூக்க வென்று |
|
தாழிருங் குழலி னாளை |
|
நெய்தலைப் பெய்து வாழ்த்தி |
|
மூழைநீர் சொரிந்து மொய்கொ |
|
ளாய்த்திய ராட்டி னாரே. |
|
(இ - ள்.) மொய்கொள் ஆய்த்தியர்-குழுமிய இடைச்சியர்; நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழித்த புல் தோய்த்து - நாழியில் உள்ள நெய்யிழுதை இளமையான பசுவின் கன்று தின்று கழித்த புல்லிலே தோய்த்து; தாழ் இருங் குழலினாளை - நீண்ட கரிய கூந்தலையுடைய கோவிந்தையை; ஊழி தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று - ஊழிகளெல்லாம் பசுவையும் தொழுவையும் போன்று ஒன்றுபட்டு நீயும் நின் கணவனும் ஒருங்கே மூப்புற்று வாழ்வீராக என்று; தலை நெய்
|
|