பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 282 

பெய்து வாழ்த்தி - அவள் தலையிலே அந்த நெய்யை வார்த்து வாழ்த்தி; மூழை நீர் சொரிந்து ஆட்டினார் - அகப்பையாலே நீரைச் சொரிந்து ஆட்டினர்.

 

   (வி - ம்.) இழுது - நெய். புல் -ஈண்டு அறுகம்புல். மூக்க : வியங்கோள். மூழை - அகப்பை. தோழ் - தொழுவம். ஆவும் தோழும் என்றதனால் நீயும் நின்கணவனும் எனப் பொருளும் இரண்டு கொள்க.

( 79 )
488 நெய்விலைப் பசும்பொற் றோடு
  நிழன்மணிக் குழையு நீவி
மைவிரி குழலி னாளை
  மங்கலக் கடிப்புச் சோ்த்திப்
பெய்தனர் பிணையன் மாலை
  யோரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறுபுன் கோலம்
  தொறுத்தியர் திகைத்து நின்றார்.

   (இ - ள்.) மைவிரி குழலினாளை - கருமை விரிந்த கூந்தலாளை; நெய்விலைப் பசும்பொன் தோடும் நிழல் மணிக்குலையும் நீவி - நெய்விலையாற் கிடைத்த புதிய பொன் தோட்டையும், ஒளிவிடும் மணிக் குழையையும் நீக்கிவிட்டு; மங்கலக் பிணையல் கடிப்புச் சேர்த்தி - மங்கலத்துக்குரிய கடிப்பிணையை அணிந்து; பிணையல் மாலை பெய்தனர் - பிணையலாகிய மாலையையும் அணிந்து; ஓர் இலைச் சாந்து பூசி - ஓர் இலையிலே கொணர்ந்த சந்தனத்தையும் பூசி; சிறு புன் கோலம் செய்தனர் - சிற்றணியாகிய மணக்கோலத்தைச் செய்தனர்; தொறுத்தியர் திகைத்து நின்றார் - இடைச்சியர் அக்கோலங்கண்டு திகைப்புற்றனர்.

 

   (வி - ம்.) கடிப்பிணை : ஒருவகைக் காதணி.

 

   மங்கலக் கடிப்பு - மங்கலங்கருதி இடப்படும் ஓரணிகலன். பெய்தனர் : முற்றெச்சம். தொறுத்தியர் - ஆய்ச்சியர். இங்ஙனம் கோலஞ் செய்து முடித்த அவ்வாய்ச்சியரே அவளழகைக் கண்டு திகைத்து நின்றார் எனினுமாம். இங்ஙனமே சீதையை மணக்கோலஞ் செய்த மகளிர் அவள் அழகை மாந்தித் தகைதடுமாறி' நின்றார். மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ' என்பர் கம்பர்.

( 80 )
489 ஏறங்கோண் முழங்க வாய
  ரெடுத்துக்கொண் டேகி மூதூர்ச்
சாறெங்கு மயரப் புக்கு
  நந்தகோன் றன்கை யேந்தி