பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 283 

489 வீறுயர் கலச நன்னீர்
  சொரிந்தனன் வீர னேற்றான்
பாறுகொள் பருதி வைவேற்
  பதுமுக குமரற் கென்றே.

   (இ - ள்.) ஆயர் ஏறங்கோள் முழங்க எடுத்துக்கொண்டு - இடையர் ஏறுகோட்பறை முழங்க அவளை அழைத்துக் கொண்டு; மூதூர் எங்கும் சாறு அயர ஏகிப் புக்கு - பழம் பதி எங்கும் விழாவயரச் சென்று கந்துகன் மனையிலே புகுந்தபின்; வீறுஉயர் கலசம் நன்னீர் சொந்தினன் - அழகினால் மேம்பட்ட கலசத்திம இருந்து தன் கையாலே நந்தகோன் நீரைச் சொரிய; வீரன் பாறுகொள் பருதி வைவேல் பதுமுக குமரற்கு என்று ஏற்றான் - (அதனைச்) சீவகன், பருந்துகள் சூழும் ஞாயிறு போன்ற கூரிய வேலேந்திய பதுமுகனுக்கு என்று கூறி ஏற்றான்.

 

   (வி - ம்.) வீறு - வேறொன்றுக்கும் இல்லாத அழகு. இச்செய்யுளில் மணஞ் செய்தமை கூறினார்.

( 81 )
490 நலத்தகை யவட்கு நாகா
  னாயிரத் திரட்டி நன்பொ
னிலக்கணப் பாவை யேழுங்
  கொடுத்தனன் போக விப்பா
லலைத்தது காமன் சேனை
  யருநுனை யம்பு மூழ்க
முலைக்குவட் டிடைப்பட் டாற்றான்
  முத்துக முயங்கி னானே.

   (இ - ள்.) நலத்தகையவட்கு நாகுஆன் ஆயிரத்திரட்டி - நலமுற்ற அழகினை யுடையாட்கு இளம்பசுக்கள் இரண்டாயிரமும்; நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போக - நல்ல பொன்னால் ஆகிய தூய இலக்கணம் நிரம்பிய பாவைகள் ஏழும் நந்தகோன் கொடுத்துச் சென்றானாக; இப்பால் அருநுனை அம்பு மூழ்கக் காமன் சேனை அலைத்தது - இங்குப் பதுமுகனைக் கூரிய முனையை உடைய அம்புகள் தைக்கும்படியாகக் காமன் படை வருத்தியது; ஆற்றாள் முலைக் குவட்டிடைப் பட்டு முத்து உக முயங்கினான் - அவன் அப்படைக்கு ஆற்றாமல் முலைக் கோடுகளின் இடையே வீழ்ந்து முத்துக்கள் சிந்துமாறு தழுவினான்.

 

   (வி - ம்.) காமன் சேனை என்பது கோவிந்தையையும், அருநுனையம்பு என்பது அவளது கண்ணையும் உணர்த்தின. மன்மதனுக்குச் சேனை மங்கையர் ஆதலால் இங்ஙனம் கூறினர்.

( 82 )